உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆன்லைனில் ஆர்டர் செய்த பார்சலில் பல்லி

ஆன்லைனில் ஆர்டர் செய்த பார்சலில் பல்லி

கொலம்பியாவில் பெண் ஒருவர் 'அமேசான்' செயலி வாயிலாக, 'ஆர்டர்' செய்து பெற்ற, 'பார்சலுக்குள் பல்லி உயிருடன் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். இதை வீடியோ எடுத்து சமூக வலைதளங்களில் வெளியிட்டார்.கொல்பியாவைச் சேர்ந்த சோபியா செரானே என்ற பெண் தனது வீட்டிற்கு ஏர் பிரேயர் எனப்படும் மின் அடுப்பு ஒன்றை அமேசான் வாயிலாக ஆன்லைனில் ஆர்டர் செய்தார்.அதன்படி வீ்ட்டிற்கு பார்சல் வந்தது. அதனை பிரித்து பார்த்த போது ஏர் பிரேயருடன் , ஸ்பானிஷ் ராக் என்ற இன பல்லி இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார். அதனை புகைப்படம் வீடியோவாக எடுத்து ‛எக்ஸ் '' தளத்தில் பதிவேற்றினார். அது வைரலாகி பலரால் பகிரப்பட்டு வருகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramesh Sargam
ஜூலை 25, 2024 09:15

பார்த்தால் உடும்பு மாதிரி தெரிகிறது…


Kasimani Baskaran
ஜூலை 25, 2024 05:49

ஏர் பிரயர் கேட்டல் பல்லி + பிரயர் அனுப்பி பட்டையை கிளப்பி இருக்கிறார்கள்...


Anonymous
ஜூலை 25, 2024 15:38

ஒன்னு வாங்கினா ஒன்னு free scheme போல


மேலும் செய்திகள்







புதிய வீடியோ