உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காதலுக்கு கண் மட்டுமல்ல..வயதுமில்லை..!: 80 வயது முதியவரை கரம் பிடித்த 23 வயது பெண்

காதலுக்கு கண் மட்டுமல்ல..வயதுமில்லை..!: 80 வயது முதியவரை கரம் பிடித்த 23 வயது பெண்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனாவில் 80 வயது முதியவரான லீ என்பவரை 23 வயது இளம்பெண் ஜியாபாங்க் என்பவர் காதலித்து கரம்பிடித்துள்ளார். திருமணத்தின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது.சீனாவின் ஹெபெய் மாகாணத்தில் வசித்து வருபவர் 80 வயதான முதியவர் லீ. இவர் அங்குள்ள முதியோர் இல்லத்தில் வசித்து வந்த நிலையில், அங்கு பணிபுரியும் 23 வயது ஜியாபாங்க் என்ற இளம்பெண்ணுடன் பழகி வந்துள்ளார். முதலில் இருவர் இணை பிரியாத நண்பராக இருந்து வந்தனர். திடீரென இருவருக்கும் இடையே காதல் மலர்ந்தது. ஜியாபாங்க் குடும்பத்தினர் முதியவரை திருமணம் செய்ய எதிர்ப்பு தெரிவித்தனர். லீயை திருமணம் செய்து கொள்வதற்காக அவர் தனது பெற்றோருடனான உறவை முறித்து கொண்டார். இதையடுத்து, லீயை இளம்பெண் ஜியாபாங்க் திருமணம் செய்து கொண்டார். பெற்றோரின் எதிர்ப்பை மீறி நடந்துள்ள இந்த திருமணத்தின் போட்டோக்கள் இணையத்தில் வைரலாகி உள்ளது. காதலுக்கு கண் மட்டுமல்ல, வயதுமில்லை என பல்வேறு தரப்பினர் வாழ்த்துகளை தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 16 )

Karthikeyan
ஜூன் 17, 2024 15:41

இதென்ன பிரமாதம்... வளர்ப்பு மகளையே திருமணம் செய்த...மானங்கெட்ட ஜென்மங்கள்


Dharma Raj
ஜூன் 17, 2024 09:32

இதெல்லாம் ஒரு சாதனையா எங்க நாட்டுல வளர்த்த மகளையே திருமணம் செய்தார் ராமசாமி நாயக்கர் அந்த மனுசனையே தலையில் தூக்கி வச்சு கொண்டாடும் தமிழகம் இந்த நியூஸ் ல சாதரணமாக கடந்து சென்று விடுவார்கள்


R S BALA
ஜூன் 17, 2024 09:17

அட...


naranan
ஜூன் 17, 2024 06:45

இது என்ன பிரமாதம்? எங்க ஊரு கேடு கெட்ட ராமசாமி போல வருமா?


M Selvaraaj Prabu
ஜூன் 16, 2024 23:17

காசு, பணம், துட்டு. லீ யுடன் நெருங்கி பழகிய பொழுது அவருடைய சொத்து விவரம், மற்றும் வாரிசு விவரங்கள் பற்றி தெரிய வந்திருக்கும். பிறகு என்ன, உடனடியாக சுறுசுறுப்பாகி ஒரு முடிவு எடுத்து விட்டார். சிறிது காலம் பொறுத்திருந்தாலே போதும். வாழ்த்துக்கள்.


என்றும் இந்தியன்
ஜூன் 16, 2024 20:15

என்ன இன்னும் ஒன்று இரண்டு வருடம் இளைஞன் மேலே போய் விடுவார் சொத்து இவள் பெயரில் அப்புறம் எவனோ ஒருவனை திருமணம் செய்து கொள்ளலாம் அவ்வளவு தானே


venugopal s
ஜூன் 16, 2024 20:00

இங்கு நிறையப் பேரை இப்படி பொறாமையில் வயிறு எரிய வைத்து விட்டாரே!


sridhar
ஜூன் 16, 2024 19:09

லீ பணக்காரரா


Oviya Vijay
ஜூன் 16, 2024 19:01

அப்போ 90ஸ் கிட்ஸ்க்கு 2070 வரைக்கும் சான்ஸ் இருக்குன்னு சொல்லுங்க... மனசு மட்டும் தளர விடக் கூடாது...


தென்காசி ராஜா ராஜா
ஜூன் 16, 2024 18:51

அதுவும் image ல காதல் மயக்கம் super


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி