உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இந்தியாவுடன் எந்த பிரச்னையும் இல்லை: சொல்கிறார் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர்

இந்தியாவுடன் எந்த பிரச்னையும் இல்லை: சொல்கிறார் மாலத்தீவு வெளியுறவு அமைச்சர்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மாலே: “மாலத்தீவில் புதிய அரசு பதவியேற்றதும், இந்தியாவுடன் மனக்கசப்பு இருந்தது உண்மை தான். இரு நாடுகளுக்கு இடையேயான தவறான புரிதல்கள் தற்போது தீர்க்கப்பட்டு விட்டன,” என, அந்நாட்டு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் கூறினார். நம் அண்டை நாடான மாலத்தீவில், 2023ல் நடந்த அதிபர் தேர்தலில், மக்கள் தேசிய காங்., கட்சியைச் சேர்ந்த முகமது முய்சு வெற்றி பெற்று அதிபரானார். சீன ஆதரவாளரான இவர், அந்நாட்டில் பாதுகாப்பு பணியில் இருந்த நம் ராணுவ வீரர்களை வெளியேறும்படி உத்தரவிட்டார். இதன்படி நம் வீரர்கள் வெளியேறினர். இதனால் இந்தியா - மாலத்தீவு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. தொடர்ந்து, பிரதமர் மோடியின் அந்தமான் - நிகோபார் பயணத்தை விமர்சித்து, மாலத்தீவின் அமைச்சர்கள் சமூக வலைதளத்தில் வெளியிட்டனர்; இது இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் மேலும் விரிசலை ஏற்படுத்தியது. இதனால் அதிருப்தி அடைந்த இந்தியர்கள், மாலத்தீவுக்கு சுற்றுலா செல்வதை தவிர்த்தனர். சுற்றுலாத் துறையை பெரிதும் நம்பியிருக்கும் அந்நாட்டுக்கு, இது பெரும் பின்னடைவை ஏற்படுத்தியது.இந்நிலையில், மாலத்தீவு வெளியுறவு அமைச்சர் மூசா ஜமீர் நேற்று கூறியதாவது:மாலத்தீவில் இருந்து இந்திய படைகளை வெளியேறும்படி, அதிபர் முகமது முய்சு உத்தரவிட்டதை தொடர்ந்து, இரு நாடுகளுக்கு இடையேயான உறவில் விரிசல் ஏற்பட்டது. எங்கள் அரசின் துவக்கக் காலத்தில், இந்தியாவுடன் கசப்பான உறவு இருந்தது என்பது அனைவருக்கும் தெரியும்.இந்தியா - மாலத்தீவு இடையே இருந்த தவறான புரிதல்கள் தற்போது தீர்த்து வைக்கப்பட்டு விட்டன. சீனா மற்றும் இந்தியாவுடன் நாங்கள் நல்ல உறவைக் கொண்டுள்ளோம். இரு நாடுகளும் மாலத்தீவை ஆதரிக்கின்றன.இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 12 )

Kumar Kumzi
செப் 16, 2024 10:31

மூர்க்கன் நம்பிக்கைக்கு தகுதியற்றவன் தனது தேவை நிறைவேறியவுடன் முதுகில் கத்தியால் குத்தவும் தயங்க மாட்டான் கற்கால காட்டேரிகள்


RAMAKRISHNAN NATESAN
செப் 16, 2024 11:08

முழு உண்மை .......... மூர்க்கனை மூர்க்கனே நம்பமாட்டான் ...... வரலாறு நமக்கு உணர்த்துவதும் அதைத்தான் ......... மதநல்லிணக்கம் பேசும் ஹிந்துக்களுக்கு - நடுநிலை நக்ஸ் க்கு - கடைசியாக மரணம் பரிசளிக்கப்படும் .... அதுதான் நடுநிலை நக்ஸ் க்கு ஒரே பெனிஃபிட் .....


N.Purushothaman
செப் 16, 2024 12:28

நம்பிக்கை துரோகம், முதுகில் குத்துவது வளர்த்த கிடா மார்பில் பாய்வது எல்லாம் மதம் என்கிற போர்வையில் மறைந்திருக்கும் மார்க்க பந்துக்களின் அடிப்படை குணாதிசியங்கள் ...


RAMAKRISHNAN NATESAN
செப் 16, 2024 10:05

இந்தியாவோட எந்தப் பிரச்னையும் இல்ல ....... அப்படின்னு சீனா சொல்லச் சொன்னிச்சா ????


கிஜன்
செப் 16, 2024 08:53

இன்னும் மாதம் 40,000 இந்தியர்கள் அங்கு சுற்றுலாவிற்கு சென்று கொண்டுதான் இருக்கிறார்கள் .... கடந்த ஆண்டை ஒப்பிடும்போது ....வெறும் 50% தான் குறைவு ... ஒருவருமே செல்லவில்லை என்றால்தான் ஒரு பயம் வரும் ... இந்தியா உங்களைப்பற்றி வாயே திறக்கவில்லை .... நீங்கள் தான் பிரதமரை சிறுமை படுத்தினீர்கள் ...


S.L.Narasimman
செப் 16, 2024 07:45

எதிரிகளை காட்டிலும் நம்மிடம் உண்டு வளர்ந்த துரோகிகளை நம்ப கூடாது.


R S BALA
செப் 16, 2024 07:44

நீ என்ன இப்போ கெஞ்சினாலும் இந்தியாவினுடைய உங்கள் உறவு கதம் கதம்தான்..


N.Purushothaman
செப் 16, 2024 07:21

பட்டால் தான் திருந்துவோம்ங்கிற க்ரூப்பு இது ....இப்போ மீண்டும் இந்தியாவுடன் நல்லுறவை துவக்க வேண்டிய கட்டாயத்திற்கு சென்றுள்ளனர் .....


RAJ
செப் 16, 2024 07:03

எந்த மானம் உள்ள இந்தியனும் உன் மண்ணிற்கு சுற்றுலா வரமாட்டான் . ..


chandrasekar
செப் 16, 2024 06:03

மாலத்தீவு இன்னொரு இலங்கை. ஏனென்றால் யார் அதிகம் காசு கொடுக்கிறார்களோ அவர்கள் பக்கம் சாய்ந்து விடுவார்கள்


சந்திரசேகர்
செப் 16, 2024 06:01

மாலத்தீவு இன்னொரு இலங்கை. யார் அதிகம் காசு கொடுக்கிறார்களோ அவர்கள் பக்கம் சாய்ந்து விடுவார்கள்


Kasimani Baskaran
செப் 16, 2024 05:11

நன்றி கெட்ட நாடு என்றுதான் சொல்ல வேண்டும்.


புதிய வீடியோ