உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / டில்லி வந்தார் மாலத்தீவு அமைச்சர்

டில்லி வந்தார் மாலத்தீவு அமைச்சர்

மாலே :இரு நாடுகளின் நட்புறவை மேம்படுத்தும் நோக்கில், மாலத்தீவு அரசின் வெளியுறவுத்துறை அமைச்சர் மூசா ஜமீர், முதன்முறையாக நம் நாட்டிற்கு நேற்று வருகை தந்தார். நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை இன்று சந்தித்து பேச உள்ளார்.நம் அண்டை நாடான மாலத்தீவின் அதிபராக முஹமது முய்சு உள்ளார். சீன ஆதரவாளரான அவர், இந்தியாவுக்கு எதிரான நிலைப்பாட்டை தொடர்ந்து எடுத்து வருகிறார். மாலத்தீவு மக்களுக்கு உதவி செய்வதற்காக முகாமிட்டிருந்த இந்திய படைகளை வெளியேறும்படி அவர் கூறினார். அதன்படி, ஒரு விமான தளத்தில் உள்ள இந்திய வீரர்கள் வெளியேறினர். மீதமுள்ள இரண்டு விமான தளங்களில் இருக்கும் வீரர்கள் நாளைக்குள் வெளியேற கெடு விதிக்கப்பட்டது.இந்த வீரர்களுக்கு பதிலாக, இந்திய தொழில்நுட்பக் குழுவினர் அங்கு பணி செய்வர் என தெரிவிக்கப்பட்டது.மாலத்தீவில் இருந்து இந்திய ராணுவ வீரர்களை வாபஸ் பெறுவதற்கான காலக்கெடு நாளை முடிவடையும் நிலையில், அதிபர் முஹமது முய்சுவின் அமைச்சரவையில், வெளியுறவுத்துறை அமைச்சராக உள்ள மூசா ஜமீர், நம் நாட்டிற்கு முதன்முறையாக அரசு முறை பயணமாக டில்லிக்கு நேற்று வந்தார்.மூன்று நாட்கள் பயணமாக வரும் அவர், நம் வெளியுறவுத்துறை அமைச்சர் ஜெய்சங்கரை டில்லியில் இன்று சந்தித்து பேச உள்ளார்.இச்சந்திப்பின்போது, இருதரப்பு மற்றும் பரஸ்பர நலன் சார்ந்த பிராந்திய விவகாரங்கள் பற்றி விவாதிப்பர் என, தகவல் வெளியாகி உள்ளது. இது தவிர, இந்தியப் பெருங்கடல் பிராந்தியத்தில் உள்ள மாலத்தீவுகளுக்கும், நம் நாட்டுக்கும் இடையேயான ஒத்துழைப்பை அதிகரிப்பது தொடர்பாகவும் பேச்சு நடத்தப்படும் என, எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Ramesh Sargam
மே 09, 2024 21:14

முதலில் அந்த அமைச்சரிடம், அவர் நாட்டு அதிபர், சீன நாட்டு விசுவாசி, இந்தியாவிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்று கூறி அவரை திருப்பி அனுப்பவும்


Saai Sundharamurthy AVK
மே 09, 2024 13:39

ஏன், மாலத்தீவு அதிபர் வர மாட்டாரோ !! வந்து மன்னிப்பு கேட்டால் தான் ஆச்சு !!!


Bharathi
மே 09, 2024 12:19

Boycott Maldives


அரவழகன்
மே 09, 2024 08:14

துரோகியை மன்னிக்க கூடாது மறக்கக்கூடாது


V RAMASWAMY
மே 09, 2024 07:42

இந்திய அளவில் மாலத்தீவு ஒரு கொசு போன்றது இந்தியாவை எதிர்ப்பதனால் அவர்களுக்குத்தான் பங்கமே தவிர இந்தியாவிற்கு எந்த பதக்கமும் இல்லை மாறாக லட்சத்தீவை ஒரு சுற்றுலாத்தீவாக மாற்றி, இந்திய வளம் பெரும் இந்திய சுற்றுலா பாதிப்பால் மாலத்தீவுக்குத்தான் நஷ்டம்


குமரி குருவி
மே 09, 2024 07:16

மாலத்தீவு பெரிய சிக்கலில் மமதை கூடா நட்பால் குப்புற விழும் நிலை....


கண்ணன்
மே 09, 2024 07:09

போய் பாக். காலல் விழச்சொல்லவும்


anonymous
மே 09, 2024 06:16

ஏதாவது ஆமாஞ்சாமி போட்டு வாங்கிய கடனை தள்ளுபடி செய்ய கோரியும் மேலும் பண உதவி கேட்டும் வந்திருப்பான்


J.V. Iyer
மே 09, 2024 03:48

சிரிய நாடு என்று விட்டுக்கொடுத்தால் ரொம்பத்தான் துள்ளுறாய்ங்க மத்திய அரசு சுமுகமாக போனாலும் மக்கள் மன்னிக்கமாட்டார்கள் விஸ்வகுரு பிரதமர் மோடிஜியே அங்கு ஒருமுறை போனால்தான் மக்கள் மாலத்தீவு பிரதமரை மன்னிப்பார்கள் நாம் லக்ஷத்தீவை ஆதரிக்கவேண்டும்


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை