உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / லண்டன் தெருக்களில் வாள் வீசியவர் கைது

லண்டன் தெருக்களில் வாள் வீசியவர் கைது

லண்டன், லண்டன் சாலையில் சென்றவர்களை, வாளால் தாக்கிய நபரை போலீசார் கைது செய்தனர்.ஐரோப்பிய நாடான பிரிட்டன் தலைநகர் லண்டனின் கிழக்கு பகுதியில் உள்ள ஹைனால்ட் என்ற இடத்தில், அடையாளம் தெரியாத நபர் சாலையில் செல்வோரை தாக்குவதாக நேற்று தகவல் வந்தது. சம்பவ இடத்துக்கு போலீசார் சென்று பார்த்தபோது, படை வீரர்கள் பயன்படுத்தும் மிகப் பெரிய வாளால் சாலையில் செல்வோரை ஒருவர் கண்மூடித்தனமாக தாக்கினார். இந்த தாக்குதலில் ஒருவர் பலியானார். இரண்டு போலீசார் உட்பட நான்கு பேர் காயமடைந்தனர்.இதற்கிடையே தாக்குதல் நடத்தியவரை போலீசார் பிடித்து கைது செய்தனர். காயம் அடைந்தவர்களின் நிலை குறித்து உடனடியாக தகவல் தெரியவில்லை. இருப்பினும், இது பயங்கரவாத தாக்குதல் அல்ல என, போலீஸ் அதிகாரி தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

W W
மே 02, 2024 09:46

தன் வினை தன்னை சுடும்


Ramesh Sargam
மே 01, 2024 13:16

அமெரிக்காவில் துப்பாக்கி கலாச்சாரம் லண்டனில் இவன் புதுசாக வாள் கலாச்சாரம் முயற்சிக்கிறான் போலும்


Kasimani Baskaran
மே 01, 2024 05:11

மர்ம மனிதராகத்தான் இருக்க வேண்டும் அது மட்டுமல்ல இப்பொளுதெல்லாம் பிரிட்டன் அகதிகளாக வந்தவர்களை திரும்ப அவரவர் நாடுகளுக்கு செல்ல கட்டாயப்படுத்துகிறது பலருக்கு போக விருப்பமில்லை அங்கிருப்போரும் வெளிநாட்டினரை பராமரிப்பதால் வரி அதிகரிக்கபடும் வாய்ப்பு இருப்பதான் அந்நியர்களை வெளியே அனுப்பவே விரும்புவார்கள்


Bye Pass
மே 01, 2024 01:29

அமைதி பெயர் இல்லையே


மேலும் செய்திகள்







சமீபத்திய செய்தி