உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 126 பேர் பலி; 188 பேர் காயம்

திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கம்; 126 பேர் பலி; 188 பேர் காயம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காத்மாண்டு: திபெத்தில் சக்தி வாய்ந்த நிலநடுக்கத்தால் 126க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். 188க்கும் மேற்பட்டோர் காயமடைந்தனர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=fnsrbv1p&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0நேபாள நாட்டின் லெபுசே என்ற நகரில் இருந்து 93 கிலோ மீட்டர் தொலைவில் இன்று(ஜன.7) காலை 6.35 மணியளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் பதிவானது. வீடுகள், கட்டிடங்கள் குலுங்கியதால் பொதுமக்கள் கடும் பீதி அடைந்தனர்.ரிக்டர் அளவுகோலில் 7.1 ஆக இந்த நிலநடுக்கம் பதிவாகி உள்ளது. நிலநடுக்கத்தின் பாதிப்பு வட இந்தியாவிலும் உணரப்பட்டுள்ளது. குறிப்பாக பீகார், புதுடில்லி, மேற்கு வங்கம் ஆகிய மாநிலத்தின் சில பகுதிகளில் உணரப்பட்டது.இந்நிலையில் நிலநடுக்கத்தால் நேபாளம் எல்லையில் திபெத்தில் 126 க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளதாக அறிவிக்கப்பட்டு உள்ளது. 188 பேர் படுகாயம் அடைந்துள்ளனர். சக்தி வாய்ந்த நிலநடுக்கம் என்பதால் பலி எண்ணிக்கை மேலும் உயரக்கூடும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Ram Moorthy
ஜன 08, 2025 07:11

நேபாள் மற்றும் திபெத் பகுதிகளில் எவ்வளவு இன்னல்கள் வந்தாலும் மக்கள் வாயை மூடிக்கொண்டு தான் சாக வேண்டும்


Sampath Kumar
ஜன 07, 2025 16:30

பாபா வாங்கவின் கணிப்பு மேய் ஆகிவருகிறது


R. SUKUMAR CHEZHIAN
ஜன 07, 2025 13:42

சீன ஆக்கிரமிப்பில் உள்ள திபெத் மக்களுக்கு நம் பாரத நாடும் மற்ற உலக நாடுகளும் இந்த இக்கட்டான சூழ்நிலையில் உதவமுயால் இருக்கிறோம். சீனாவின் பிடியில் இருந்து கூடிய விரைவில் திபெத் சுதந்திரம் அடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திப்போம். இந்த இக்கட்டான சூழ்நிலையில் திபெத்திய சகோதர சகோதரிகளுக்கு இறைவன் துணை நிற்கட்டும்.


SUBRAMANIAN P
ஜன 07, 2025 13:39

சீனாவுக்கு இது எச்சரிக்கை. உலகிலேயே மிகப்பெரிய அணையை ப்ரம்மபுத்திரா சாங்ப்பூ நதியில் கட்ட வேலை செய்து வருகிறது. அது ஆரம்பிப்பதுக்கு முன்னேயே இயற்கை மணி அடித்துவிட்டது. இதுபற்றிய செய்தி வந்தவுடனேயே நான் கருத்து தெரிவித்து இருந்தேன். பெரிய நிலநடுக்கம் வரும் என்று. இது எச்சரிக்கைதான் . சீனாவால் திபெத், நேபால், பூடான் , இந்தியா , பங்களாதேஷ் எல்லாத்துக்கும் அழிவுதான்.


RAMAKRISHNAN NATESAN
ஜன 07, 2025 13:37

நிலநடுக்கத்தால் பாரதத்தின் வடகிழக்குப் பகுதிகள் / வடகிழக்கு நாடுகள் அதிகம் பாதிக்கப்பட்டு வருகின்றன ....பிரம்மபுத்ராவுக்கு சீனா அணை கட்டும் செயல் ஆபத்தானது ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை