பாக்., ராணுவம் தாக்குதல் தலிபான்கள் 8 பேர் பலி
இஸ்லாமாபாத், ஆப்கன் - பாக்., எல்லையில், பாகிஸ்தான் ராணுவம் நடத்திய தாக்குதலில், ஆப்கானிஸ்தானின் தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த எட்டு பேர் கொல்லப்பட்டனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின், கைபர் பக்துன்க்வா மாகாணத்தில் பாக்., - ஆப்கன் எல்லையில் பாலோசின் என்ற பகுதி உள்ளது. இங்குள்ள சோதனைச்சாவடி மீது, கடந்த 7ம் தேதி, ஆப்கனில் ஆளும் தலிபான் பயங்கரவாதிகள் கனரக ஆயுதங்களுடன் தாக்குதல் நடத்தினர்.இதற்கு பதிலடி கொடுக்கும் வகையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்திற்கு அருகே, குர்ரம் என்ற எல்லைப் பகுதியில், ஆப்கானிஸ்தானின் துருப்புகளை குறிவைத்து, பாக்., பாதுகாப்புப் படையினர் நேற்று தாக்குதல் நடத்தினர். இதில், தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த எட்டு பேர் சுட்டுக் கொல்லப்பட்டனர். மேலும், 16 பேர் காயமடைந்தனர்.இந்த தாக்குதலில், தலிபான் அமைப்பின் முக்கிய இரு கமாண்டோக்கள் உயிரிழந்ததாகக் கூறப்படுகிறது. எல்லையில், பாக்., - ஆப்கானிஸ்தான் இடையே மோதல் அதிகரித்துள்ளதால் பதற்றம் ஏற்பட்டுள்ளது.