உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அதிபர் தேர்தல் வேட்பாளர் தமிழர் கட்சியில் பிளவு

அதிபர் தேர்தல் வேட்பாளர் தமிழர் கட்சியில் பிளவு

கொழும்பு, இலங்கை அதிபர் தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டணியின் பொது வேட்பாளராக அரியநேத்திரன் அறிவிக்கப்பட்டுள்ளார். இது தமிழர் கட்சிக்குள் பிளவை ஏற்படுத்திவிடும் என்று அச்சம் தெரிவிக்கப்பட்டுள்ளது.நம் அண்டை நாடான இலங்கையில், செப்., 21ம் தேதி அதிபர் தேர்தல் நடக்க உள்ளது. இதில், தற்போதைய அதிபர் ரணில் விக்ரமசிங்கே உட்பட 39 பேர் போட்டியிடுகின்றனர். இந்த தேர்தலில், தமிழ் கட்சிகள் சார்பில் போட்டியிடுவதாக முன்னாள் எம்.பி.,யான அரியநேத்திரன் கூறியிருந்தார்.இந்நிலையில், தமிழ் தேசியக் கூட்டணி தலைவரான ஸ்ரீதரன் அவருக்கு நேற்று வெளிப்படையாக ஆதரவு தெரிவித்துள்ளார்.முன்னதாக, அதிபர் தேர்தலில் சுயேச்சையாக போட்டியிட அரியநேத்திரன் விண்ணப்பித்திருந்தார். இதுகுறித்து விளக்கம் அளிக்கும்படி அவருக்கு, தமிழ் தேசியக் கூட்டணி உத்தரவிட்டிருந்தது. சமீபத்தில் நடந்த கூட்டணியின் கூட்டத்தில், அரியநேத்திரன் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க பரிந்துரை செய்யப்பட்டிருந்தது.அதிபர் தேர்தலில், 1.71 கோடி பேர் ஓட்டளிக்க உள்ள நிலையில், அதில், வடக்கு மற்றும் கிழக்கு பிராந்தியத்தில் உள்ள தமிழர்களின் எண்ணிக்கை, 22 லட்சமாக உள்ளது. அதனால், அதிபர் தேர்தலில் முக்கிய வேட்பாளர் யாருக்காவது ஆதரவு அளிக்கலாம் என, கூட்டணியின் மூத்த தலைவர் சுமந்திரன் கூறியிருந்தார்.இந்நிலையில், அரியநேத்திரன் பொது வேட்பாளராக அறிவிக்கப்பட்டுள்ளது, கூட்டணியில் புகைச்சலை ஏற்படுத்திஉள்ளது. இது கூட்டணியில் பிளவு ஏற்படுத்தி விடும் என்ற அச்சத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை