உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு

அமெரிக்க அதிபர் தேர்தலில் போட்டியிட கமலா ஹாரிசுக்கு பெருகும் ஆதரவு

வாஷிங்டன் : அமெரிக்க அதிபர் தேர்தல் பொது விவாத நிகழ்ச்சியில், அதிபர் ஜோ பைடன், 81, தடுமாறியதால், அவருக்கு மாற்றாக துணை அதிபர் கமலா ஹாரிசுக்கு ஆதரவு பெருகிவருவதாக தகவல் வெளியாகியுள்ளது.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல் நவம்பரில் நடக்க உள்ளது. இதில், ஜனநாயக கட்சி சார்பில், தற்போதைய அதிபர் ஜோ பைடன் மற்றும் குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, போட்டியிட உள்ளனர்.இந்நிலையில், சமீபத்தில் நடைபெற்ற பைடன் - டிரம்ப் பங்கேற்ற பொது விவாத நிகழ்ச்சியின் போது டிரம்ப் கேள்விக்கு பதில் அளிக்க முடியாமல், பைடன் தடுமாறினார். இது ஆளும் ஜனநாயக கட்சிக்கு அதிர்ச்சி அளித்துள்ளது.இந்நிலையில் துணை அதிபராக உள்ள இந்திய வம்சாவளியான கமலா ஹாரிஸ், அதிபர் தேர்தலில் போட்டியிட்டால், அவருக்கு வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.அட்லாண்டா விவாதத்துக்குப் பின், அதிபர் வேட்பாளர் ஜோ பைடனை மாற்ற வேண்டும் என்ற வாதம் ஜனநாயக கட்சிக்குள் எழுந்துள்ளது. கருத்துக் கணிப்பின்படி, டிரம்புக்கு 47 சதவீத மக்களும், கமலா ஹாரிசுக்கு 45 சதவீத மக்களும் ஆதரவு தெரிவித்துள்ளனர். அதனால், அதிபர் பதவிக்கு கமலா ஹாரிஸ் போட்டியிட்டால், வெற்றி வாய்ப்பு அதிகம் உள்ளதாக கருத்துக் கணிப்புகள் தெரிவிக்கின்றன.அதே நேரத்தில், ஜனநாயக கட்சி சார்பில் முன்னாள் அதிபர் பராக் ஒபாமாவின் மனைவி மிச்சைல் ஒபாமா போட்டியிட்டால், அவருக்கு 50 சதவீத மக்களின் ஆதரவும், டிரம்புக்கு 39 சதவீத மக்களின் ஆதரவும் கிடைக்கும் என, கருத்துக் கணிப்பு தெரிவிக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 11 )

ஆரூர் ரங்
ஜூலை 04, 2024 17:20

டாலர் சரிவுக்குக் காத்திருக்கிறது. இப்போ அதிபராக ஆவது தலைவலி திருகுவலி.


Barakat Ali
ஜூலை 04, 2024 12:05

ஆரிய வாரிசு அமெரிக்க அதிபராவதா ????


PRS
ஆக 03, 2024 05:57

ஆரியனுக்கும் இவளுக்கும் என்ன பாய் சம்பத்ந்தம்? ஒபாமா அப்பா எந்த வழி பாய்? வன்மத்தை காமிக்காதீங்க .


Santhosh Kumar
ஜூலை 04, 2024 07:03

இப்பொது உலகம் உள்ள சூழ்நிலையில் trumph தான் சரியான தேர்வு.. ஆப்கானிஸ்தான் பார்த்து பயந்து ஓடியவர்தான் ஜோ பைடன்.. சீனாவை எதிர்க்க நல்ல தில் வேண்டும்.. அதுக்கு ஜார்ஜ் புஷ் and clinton போல guts உள்ளவர் trumph


Kasimani Baskaran
ஜூலை 04, 2024 05:26

பெண். அதுவும் இந்தியர் கலப்பு என்றால் ஆதரவு குறைவு. ஆனால் பைடனை ஒப்பிட்டால் திடகாத்திரமாக வேலை செய்ய சாத்தியம் உண்டு.


rama adhavan
ஜூலை 04, 2024 03:49

சிறிது கூட வாய்ப்பு இல்லை. அடுத்த முறை துணை ஜனாதிபதி வாய்ப்பும் இல்லை. இவருக்கு மேல் பல ஜாம்பவான்கள் இப் பதவிக்கு உள்ளனர். மேலுமிக் கட்சியின் மேல்மட்டக் குழுவில் உள்ள 4000 உறுப்பினர்களில் இவருக்கு குறைந்த பட்சம் 2000 உறுப்பினர்கள் ஆதரவு தேவை. அது இவருக்கு கட்டாயம் கிடைக்காது.


தாமரை மலர்கிறது
ஜூலை 04, 2024 01:01

இந்திய வம்சாவளி பெண் அதிபராக வாழ்த்துக்கள்.


SUBBU,MADURAI
ஜூலை 04, 2024 06:35

இவள் நம் தேசத்திற்கு எதிரானவள் இவளுக்கு சப்போர்ட் செய்யாதீர்கள். இவள் பாகிஸ்தானுக்கு ஆதவரவாக இருப்பவள் எனவே இவளை நன்றாக படித்து புரிந்து கொண்டு கருத்தை போடுங்கள்.


PRSwamy
ஜூலை 04, 2024 00:28

இவள் ஒரு ராகுல் காந்தி. கமலா ஜனாதிபதி ஆனால் அமெரிக்கா பாவம். இவள் அனுபவம் இல்லாத ஒரு அரசியலவாதி.


Senthoora
ஜூலை 04, 2024 06:56

நீங்க என்னமோ உலக அரசியலை கலக்கி குடித்தவர்றமாதிரி, பாவம் என்ன செய்ய ராகுலின் வன்மத்தை அந்த ஆம்மாமேல காட்டுறிங்க.


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ