உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / முதல் பயணமே சக்ஸஸ்; தனியார் ஸ்பேஸ் வாக் சுற்றுலா மகிழ்ச்சியுடன் நிறைவு!

முதல் பயணமே சக்ஸஸ்; தனியார் ஸ்பேஸ் வாக் சுற்றுலா மகிழ்ச்சியுடன் நிறைவு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

புளோரிடா: முதல்முறையாக தனியார் விண்வெளி பயணத்தை மேற்கொண்ட ஜாரெட் ஐசக்மேன் தலைமையிலான குழுவினர் வெற்றிகரமாக பூமிக்கு திரும்பினர்.

முதல் பயணம்

போலரிஸ் டான் என்னும் திட்டத்தின் மூலம் தனியார் நிதியுதவியுடன் ஸ்பேஸ் எக்ஸ் பால்கன் 9 ராக்கெட்டின் மூலம் முதல் தனியார் விண்வெளிப் பயணம் கடந்த 10ம் தேதி மேற்கொள்ளப்பட்டது. கோடீஸ்வரர் ஜாரெட் ஐசக்மேன், ஓய்வுபெற்ற விமானி ஸ்காட் போட்டீட், ஸ்பேஸ் எக்ஸ் இன்ஜினியர்கள் அன்னா மேனன், சாரா கில்லிஸ் ஆகியோர் இந்தப் பயணத்தை மேற்கெண்டனர்.

பெருமை

கடந்த 12ம் தேதி விண்வெளிக்குச் சென்றடைந்த 4 பேரும் ஸ்பேஸ் வாக் செய்து மகிழ்ச்சியடைந்தனர். இதன்மூலம், முதல் தனியார் ஸ்பேஸ் வாக்கில் விண்வெளியை கண்டு ரசித்த நபர் என்ற பெருமையை ஜாரெட் ஐசக்மேன் பெற்றார். மேலும், சுற்றுப்பாதையில் பயணித்து பூமிக்கு மேலோ 1,400 கி.மீ., வரை சென்றுள்ளனர்.

வெற்றிகரம்

இந்த நிலையில், 5 நாள் விண்வெளி பயணத்தை வெற்றிகரமாக முடித்து விட்டு இன்று பூமிக்கு திரும்பியுள்ளனர். புளோரிடாவில் உள்ள ட்ரை டோர்ட்சுகாஸ் கடலில் பாராசூட் உதவியுடன் இறங்கினர். இது தனியார் விண்வெளி பயணத்தில் முதல்முறை நிகழ்த்தப்பட்ட அரிய சாதனையாகும்.

ஆய்வுகள்

இந்தப் பயணத்தின் போது, விண்வெளியில் அவசர மருத்துவ சேவைகளை மேம்படுத்துதல், அதிநவீன மருத்துவ உபகணரங்களுடன் உடல்நிலையை கண்காணிப்பது, ஸ்டார்லிங்க் சாட்டிலைட்டுடன் தொடர்பு உள்ளிட்ட 40க்கும் மேற்பட்ட ஆய்வுகளை செய்து விட்டு, அந்த தகவலுடன் பூமிக்கு வந்துள்ளனர். இதன்முலம், இனி வரும் காலங்களில் விண்வெளி பயணத்திற்கான திட்டங்களை தீட்டமுடியும் என்று நம்புகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

THINAKAREN KARAMANI
செப் 15, 2024 21:59

அரசுகள் தவிர தனியாரும் விண்வெளி பயணம் மற்றும் ஆராய்ச்சிகளை மேற்கொள்ள இந்த தனியார் விண்வெளி வெற்றிப் பயணம் ஓர் உத்வேகமாக இருக்கும். குழுவினருக்கு வாழ்த்துக்கள் பாராட்டுக்கள் THINAKAREN KARAMANI, VELLORE, INDIA.


Palanisamy Sekar
செப் 15, 2024 16:08

இதெல்லாம் ஒரு சாதனையாக கேட்க முடியவில்லை. ஏனெனில் எங்கள் தமிழக முதல்வர் அமேரிக்கா போயிட்டு வந்தது தான் எங்கு பார்த்தாலும் எந்த செய்தியிலும் தொடர்ந்து சலிக்காமல் போட்டுக்கொண்டே இருந்தார்கள். அதனால் இந்த செய்தியை எங்களால் ரசிக்க முடியவில்லை. நீங்களும் ஒருமுறை கேட்டுப்பாருங்கள் எங்கள் தமிழக ஊடகங்களின் பரப்புரையை. அடேங்கப்பா அதனை விடவா இந்த ஸ்பேஸ் பயணம்... செல்லாது செல்லாது


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை