உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து: அதிபர் நிலை என்ன? தேடுதல் தீவிரம்

ஈரான் அதிபர் பயணித்த ஹெலிகாப்டர் விபத்து: அதிபர் நிலை என்ன? தேடுதல் தீவிரம்

டெஹ்ரான்: ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணம் செய்த ஹெலிகாப்டர் விபத்துக்குள்ளானதாக கூறப்படுகிறது. ஈரான் நாட்டின் அதிபராக இருப்பவர் இப்ராஹிம் ரைஸி. இவர் அஜர்பைஜான் நாட்டில் கட்டப்பட்டு உள்ள அணை ஒன்றை திறப்பதற்காக அந்நாட்டின் அதிபர் இல்ஹாம் அலியேவ் உடன் அந்த நிகழ்ச்சியில் கலந்து கொண்டதாக கூறப்படுகிறது. இதனிடையே வாகன தொடரின்போது ( கான்வாய்) ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைஸி பயணித்த ஹெ லிகாப்டர் விபத்தில் சிக்கியதாக கூறப்படுகிறது. இது குறித்த ஈரான் நாட்டின் அரசு அறிவிப்பு வெளியாகவில்லை. இருப்பினும் பனி மூட்டம் காரணமாக விபத்து நடந்திருக்கலாம் என கூறப்படுகிறது. இந்நிலையில் அதிபர் பயணித்தஹெலிகாப்டரை தேடும் பணி முடுக்கி விடப்பட்டு உள்ளது. அதிபர் உடன் இருந்தவர்கள் யார் என்பது குறித்து விபரம் கண்டறியப்பட்டு வருகிறது.

ஈரான் அதிபருக்காக பிரார்த்தியுங்கள் சமூகவலைதளத்தில் பதிவு

ஹெலிகாப்டர் விபத்தில் சிக்கிய ஈரான் அதிபர் இப்ராஹிம் ரைசிக்காக பிரார்த்திக்குமாறு அவரது அதிகாரப்பூர்வ சமூகவலைதள பக்கத்தில் பதிவு செய்யப்பட்டிருந்தது.மோசமான வானிலையால் விபத்து நேர்ந்த பகுதியை அடைய ஈரான் மீட்புப் படையினர் கடும் சவாலை எதிர்கொண்டு வருவதாக தகவல்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

Kumar Kumzi
மே 20, 2024 00:16

எங்கள் டலபதி அவியாத அவியலிடம் வேண்டுகோள் விடுங்கள் தனது படையினரை அனுப்பி மீட்டு தருவார்


ஆரூர் ரங்
மே 19, 2024 22:11

மொஸாத்திடம்.. கேட்கவும்.


Ramesh Sargam
மே 19, 2024 21:01

மழைக்காலம், பனிமூட்டம் இருக்கும் காலங்களில் ஹெலிகாப்டரில் பயணம் செய்வதை தலைவர்கள் தவிர்க்கவேண்டும்


subramanian
மே 19, 2024 19:56

பிபின் ராவத் என்றும் மக்கள் மனதில் உள்ளார் இந்தியாவில் ஹெலிகாப்டர் அனைத்தும் சரியாக பராமரிக்க வேண்டும் ஈரான் நாட்டு மக்கள் இறைவனை பிரார்த்தித்து வணக்கம் செலுத்த வேண்டும்


Columbus
மே 19, 2024 23:11

And YSR Rajasekhar Reddy and Actress Soundarya


மேலும் செய்திகள்









முக்கிய வீடியோ