உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இது, இந்தியாவில் விதைத்த விதை; தாத்தா, பாட்டி பற்றி கமலா ஹாரிஸ் உருக்கம்

இது, இந்தியாவில் விதைத்த விதை; தாத்தா, பாட்டி பற்றி கமலா ஹாரிஸ் உருக்கம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: தாத்தா பாட்டிகள் தினத்தை முன்னிட்டு, இந்தியாவில் தனது குடும்பத்துடன் நிகழ்ந்த சுவாரஸ்ய நிகழ்வுகளை பகிர்ந்து, அமெரிக்க அதிபர் வேட்பாளர் ஹாரிஸ் வாழ்த்து தெரிவித்துள்ளார்.

போட்டி

அமெரிக்க அதிபருக்கான தேர்தல் இந்த ஆண்டு நவம்பர் மாதம் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் குடியரசு கட்சி வேட்பாளர் டொனால்டு டிரம்ப்பை எதிர்த்து, ஜனநாயகக் கட்சியின் பேட்பாளராக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த கமலா ஹாரிஸ் போட்டியிடுகிறார். இதையொட்டி, அவர் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகிறார்.

தாத்தா, பாட்டி தினம்

இந்த நிலையில், நேற்று முன்தினம் (செப்.,8) உலக தாத்தா பாட்டிகள் தினம் கொண்டாடப்பட்டது. இதையொட்டி, அமெரிக்க அதிபர் வேட்பாளர் கமலா ஹாரிஸ், தனது தாத்தா, பாட்டி குறித்து உருக்கமாக சில தகவல்களை பகிர்ந்துள்ளார்.

இந்தியா

இது தொடர்பாக அவர் விடுத்துள்ள எக்ஸ் தளப் பதிவில், 'இளம் வயதின் போது இந்தியாவில் உள்ள எனது தாத்தா, பாட்டியைக் காணச் சென்றேன். அங்கு எனது தாத்தா என்னை காலை நடைபயிற்சிக்கு அழைத்துச் செல்வார். அப்போது, சமஉரிமை மற்றும் ஊழலுக்கு எதிரான போராட்டம் குறித்து என்னிடம் கூறுவார். ஓய்வு பெற்ற அதிகாரியான எனது தாத்தா, இந்திய சுதந்திரத்திற்காக போராடியவர்.

அடுத்த தலைமுறை

அதேபோல, பெண்களின் உரிமை மற்றும் பிறப்பு சதவீதத்தை கட்டுப்படுத்துதல் உள்ளிட்டவை குறித்து இந்தியாவின் பல பகுதிகளுக்குச் சென்று என் பாட்டியும் குரல் கொடுத்துள்ளார். அவர்களின் பொதுச்சேவை மற்றும் போராட்டங்களே, என்னுடைய இந்த சிறந்த வாழ்க்கை முறைக்கு வழிவகுத்தது. அடுத்த தலைமுறையை வடிவமைக்கும் அனைத்து தாத்தா, பாட்டிகளுக்கும் என்னுடைய வாழ்த்துக்கள்,' எனக் குறிப்பிட்டுள்ளார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 19 )

theruvasagan
செப் 09, 2024 21:20

அமெரிக்கனுங்க கொள்ளிக்கட்டைய எடுத்து தலைய சொறிஞ்சிக்கப் போறானுகளோன்னு தோணுது.


kulandai kannan
செப் 09, 2024 14:52

ஈ.வெ.ராவுக்கு சமாதிக்குள்ளும் வயிறு எரியும்.


Raja
செப் 09, 2024 12:54

The world is in the CUSP Uncertainty is ruling in most of the countries Kamala Harris is a supporter of Illegal immigrants into the US which Trump is opposing. She is inclined towards communism -the world has fully rejected communism. She is a supporter of Immigration from "other " countries Now Most of the European countries are waking up and sending back the immigrants -they are spoilers of the country where they seek asylum. Despite TRUMP some points with which People may not agree, she is not against the US, Illegal immigrants, Border fencing, a close ally to India to counter China. Hence DO NOT support either directly and/or indirectly to Kamal Harris under some pretext like Tamilian, Indian lady etc .


SUBBU,MADURAI
செப் 09, 2024 15:01

இந்தியா 370 சட்டத்தை நீக்கி காஷ்மீரை பாரதத்துடன் சேர்த்த போது அங்கு தேர்தல் நடத்தி அதற்கப்புறம்தான் இந்தியாவுடன் சேர வேண்டும் என அந்த மக்களும் பாகிஸ்தானும் முடிவு பண்ண வேண்டும் என்று முதல் ஆளாக பாகிஸ்தானுக்கு ஆதரவாக இந்தியாவை எதிர்த்து முழக்கமிட்டவள் இந்த கழுதை மூஞ்சி கமலாஹாரிஸ் இவள் இந்திய தந்தைக்கு பிறக்கவில்லை ஆப்பிரிக்க தந்தைக்கு பிறந்தவள் அப்படியிருக்கும் போது இவள் இந்தியாவிற்கு எப்படி விசுவாசமாக இருப்பாள்?இத்தாலிய தாய்க்கும் இந்திய தந்தைக்கும் பிறந்த ராகுல்காந்தியே தன் தந்தையின் தேசத்திற்கு விசுவாசமில்லாமல் பாரத நாட்டை அந்நிய நாடான சீனாவுக்கு அடகு வைக்கும் போது இந்த கமலா ஹாரிஸ் எல்லாம் இந்தியாவுக்கு எம்மாத்திரம் அதனால் அமெரிக்க வாழ் இந்தியர்களே தயவுசெய்து டொனால்ட் ட்ரம்பை ஆதரித்து அவரை உங்கள் நாட்டின் அதிபராக தேர்ந்தெடுங்கள் மறந்தும் இந்த சூனியக்காரி கமலாஹாரிஸை தேர்ந்தெடுத்து உங்கள் தலையில் மண்ணை அள்ளி போட்டு கொள்ளாதீர்கள்.


Ramesh
செப் 09, 2024 11:54

வயல் எங்களுதுதான் ஆனால் விதை போட்டது யாரு. விதை தான் நெல்லாகும். நிலம் நெல்லாகாது.


பெரிய குத்தூசி
செப் 09, 2024 11:09

அம்மா கமலா ஹாரிஸ், நீயும் திருவாரூர் காரிதான், திருட்டு ரயில் ஏறி சென்னைக்கு வந்தவரும் திருவாரூர் காரர் தான். ஓட்டுக்காக நீங்க ரெண்டு பெரும் என்னவேனாலும் செய்விங்க என்பது எல்லாருக்கும் தெரியும்.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
செப் 09, 2024 12:47

எப்படி எல்லா அரசியல் வாதிகள் சினிமா டிவி பிரமுகர்கள் எல்லாம் ஒரே மாதிரியாக பேசுகிறார்கள் பாருங்களேன். துணை ஜனாதிபதி ஆன பிறகு எத்தனை முறை இவர் தாத்தா பாட்டி ஊருக்கு வந்துள்ளார்


Balasubramanyan
செப் 09, 2024 10:25

She has not spoken anything about India and TamilNadu till she coned for VP ELECTION NOW SHE WANTS TO CORNOR AND GET SYMPATHY VOTES FROM INDIAN COMMUNITIES. HER G. PARENTS GAVE HER GOOD VISION. BUT SHE NEVERLEARNT IT. SHE BECAME 200 PERCENT AMERICAN .THE INDIAN CULTURE IS NOT LETTING DOWN THE OLD PARENTS AT THEIR OLD AGE. IS SHE FOLLOWING IT.


Barakat Ali
செப் 09, 2024 09:29

விதை நன்னா முளைச்சுதோன்னோ ????


veeramani hariharan
செப் 09, 2024 08:57

Please dont support her. She is leftist and will never support for our Country,s development.


sankaranarayanan
செப் 09, 2024 08:36

நன்றியுள்ள பாராத தமிழக பெண்மணி வாழ்க வளர்க வெற்றி பெறுக தமிழக பண்பாட்டை உலகெங்கும் எடுசெல்லும் பெண்ணாக விளங்குவார்


Kumar Kumzi
செப் 09, 2024 10:56

மிஸ்டர் ஓசிகோட்டர் கொத்தடிமை அவள் அப்படி என்ன டுமீல் நாட்டுக்கு செஞ்சி கிழிச்சிட்டா


Duruvesan
செப் 09, 2024 13:04

பாஸ் விடியலுக்கு பூணல் போட்டவனை கண்டாலே புடிக்காது


Barakat Ali
செப் 09, 2024 08:27

இந்தியாவுல இருக்கும்போது தள்ளி நில்லு .... தீட்டு ஒட்டிக்கும் ம்பேள் ....... இப்போ வம்சாவளியினர் அத்தனை பேரோட ஓட்டும் வேண்டியிருக்கு ........


karupanasamy
செப் 09, 2024 09:19

அவா பரவாயில்லை தள்ளி நில்லுன்னு சொல்லுவா. நீங்க காஃபீர்ன்னு எங்க தலையை அறுத்து போடுவீங்களே. தலை அறுபட்டு சாவுறத்துக்கு தள்ளி நிக்குறதே மேல்.


ராமகிருஷ்ணன்
செப் 09, 2024 10:28

கமலா ஹாரிஸ்க்கு அமெரிக்க அதிபர் ஆக வாய்ப்பு வந்தால் அதற்கு காரணம் யார். அவர்கள் குடும்பம் அங்கு போக காரணமான நம்ம ....தான். இதனையும் நினைத்து பார்க்க வேண்டும்.


Matt P
செப் 10, 2024 07:22

இந்தியாவில பலர் ஜாதி பார்த்தார்கள் என்பது உண்மை இந்தியாவில் இன்னொரு பிரிவில் இவர் திருமணம் செய்திருப்பாரா என்பதும் சந்தேகமே. இவர் குடும்பம் அனுமதிக்குமா என்பதும் சந்தேகமே ஆனால் இவர் நாடு கடந்து வந்து ஒரு வெள்ளையரை அல்ல ஒரு கருப்பரை தைரியமாக திருமணம் செய்த பிறகு குடும்பத்தால் அனுமதி கிடைத்து அரவணைக்கப்பட்டு வாழ்ந்து இன்றைக்கு நாட்டின் முதல் பெண்மணியாக வரும் அளவுக்கு வளர்க்கப்பட்டிருக்கிறார் என்றால் ஆச்சரியப்பட வேண்டிய ஓன்று தான். கமலாவின் அம்மா அவருடைய கணவனை பிரிந்து இரண்டு குழநதைகளையும் வளர்த்திருக்கிறார். எல்லா ஜாதியிலும் சமநீதியோடு இரக்க உணர்வோடு வாழ்பவர்கள் இருப்பார்கள். சமுதாயத்தோடு ஒட்டி வாழ்வதற்காக,வெளிக்காட்டி கொள்வதில்லை.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை