உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / படிக்க அமெரிக்கா வந்தாலே குடியுரிமை: இந்தியர்களுக்கு ஐஸ் வைக்கும் டிரம்ப்

படிக்க அமெரிக்கா வந்தாலே குடியுரிமை: இந்தியர்களுக்கு ஐஸ் வைக்கும் டிரம்ப்

வாஷிங்டன்: அமெரிக்காவில் கல்லுாரி படிப்பு படிக்க வரும் வெளிநாட்டு மாணவர்களுக்கு நிரந்தர குடியுரிமை வழங்கப்படும் என, முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் தெரிவித்துள்ளார்.அமெரிக்காவில் வரும் நவம்பர் மாதம் அதிபர் தேர்தல் நடக்கிறது. ஜனநாயக கட்சி சார்பில் தற்போதைய அதிபர் ஜோ பைடன், குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப் போட்டியிட களத்தில் உள்ளனர்.டிரம்பை பொறுத்தவரை, அவர் அதிபராக இருந்த காலகட்டத்தில் குடியுரிமை திட்டத்தில் பல கடுமையான கெடுபிடிகளை கடைப்பிடித்தார். 'கிரீன் கார்டு' எனப்படும் நிரந்தர குடியுரிமை வழங்குவது, 'ஐடி' உள்ளிட்ட துறைகளில் நிபுணத்துவம் பெற்றவர்களுக்கான, 'எச்1பி விசா' வழங்குவதில் கடுமை காட்டி வந்தார். தற்போது அதிபர் தேர்தலை எதிர்நோக்கி உள்ளதால், குடியுரிமை விவகாரங்களில் தன் கெடுபிடி கொள்கைகளை டிரம்ப் தளர்த்திக் கொண்டுஉள்ளார்.இது குறித்து, 'பாட்காஸ்ட்' ஒன்றுக்கு அவர் அளித்த பேட்டியில் கூறியதாவது: வெளிநாடுகளில் இருந்து அமெரிக்கா வந்து படிப்பவர்கள் இரண்டு அல்லது நான்கு ஆண்டுகள் படிப்பு முடிந்த பின், இங்கேயே தங்கி பணியாற்ற விரும்புகின்றனர். அவர்களுக்கு நிரந்தர குடியுரிமை கிடைக்காததால், இந்தியாவுக்கோ, சீனாவுக்கோ திரும்பிச் சென்று அங்கே தொழில் துவங்கி, ஆயிரக்கணக்கானோருக்கு வேலைவாய்ப்பு அளிக்கின்றனர். இதனால், நம் நாட்டின் எதிர்காலம் பாதிக்கப்படுகிறது.அதை இனியும் ஏற்றுக்கொள்ள முடியாது. நான் ஆட்சிக்கு வந்தால், அமெரிக்கா வந்து படிக்கும் வெளிநாட்டு மாணவர்கள் படிப்பை முடித்ததும், அவர்களுக்கு கிரீன் கார்டு வழங்கப்படும். இவ்வாறு அவர் கூறினார்.அமெரிக்கா சென்று படிக்கும் வெளிநாட்டு மாணவர்களில் சீனாவுக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தில் இந்தியா உள்ளது. கடந்த 2022 - 23ல், 2,89,526 சீன மாணவர்கள் அமெரிக்காவுக்கு படிக்கச் சென்றுள்ளனர். இந்தியாவில் இருந்து, 2,68,923 மாணவர்கள் சென்றுள்ளனர். இது, கடந்த ஆண்டை விட 35 சதவீதம் அதிகம்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

சண்முகம்
ஜூன் 22, 2024 23:35

இதனால் பயனடையும் எவருக்கும் அமெரிக்காவில் ஓட்டுரிமை இல்லை.


பெரிய ராசு
ஜூன் 22, 2024 11:20

இந்திய பேராசிரியர்களை திறமை வைத்தவர்களை அமெரிக்கா பேராசிரியர்கள் ஆக்கிவிட்ட பெருமை


நரேந்திர பாரதி
ஜூன் 22, 2024 09:01

இந்தியா அரசியல் வியாதிகளை மாடல் உலகம் முழுதும் காப்பி அடிக்க துவங்கியுள்ளது நாமெல்லாம் கலிகாலம் இறுதியில் உள்ளதை காட்டுகிறது


Barakat Ali
ஜூன் 22, 2024 10:09

இவர் பேச்சுதான் நமது அரசியல்வாதிகளைப் போல .... வாக்குறுதியோடு சரி .... தாஜா அரசியல் செய்யமாட்டார் .....


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ