உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

துபாய்: ஐக்கிய அரபு அமீரகத்தில் கேரளாவைச் சேர்ந்த இருவருக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கண்ணூரைச் சேர்ந்த முகமது ரினேஷ் என்பவர் அல் அய்ன் எனும் டிராவல் ஏஜென்சியில் வேலை செய்து வந்தார். இவர் ஐக்கிய அரபு அமீரகத்தைச் சேர்ந்த ஒருவரை கொலை செய்த வழக்கில் குற்றவாளியாக அறிவிக்கப்பட்டார். அதேபோல, கேரளாவைச் சேர்ந்த மற்றொரு நபரான முரளிதரன் என்பவருக்கு, இந்தியர் ஒருவரை கொலை செய்த சம்பவத்தில் தொடர்பிருப்பது தெரிய வந்தது. இதையடுத்து, இருவருக்கும் மரண தண்டனை விதிக்கப்பட்டது. இது குறித்து இந்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன் பிறகு, முகமது ரினேஷ் மற்றும் முரளிதரன் ஆகியோரை அதிகாரிகள் தூக்கிலிட்டனர். ஐக்கிய அரபு அமீரகத்தில் இதுவரையில் 28 இந்தியர்களுக்கு மரண தண்டனை நிறைவேற்றப்பட்டுள்ளது. கடந்த மார்ச் 3ம் தேதி குழந்தையை கொன்ற குற்றத்திற்காக உத்தரபிரதேசத்தைச் சேர்ந்த பெண் தூக்கிலிடப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 18 )

நிக்கோல்தாம்சன்
மார் 06, 2025 21:50

அப்படியொரு சட்டம் இந்தியாவில் இருந்திருந்தா கோவை குண்டுவெடிப்பு செய்தவனுக்கு என்ன தண்டனை கிடைத்திருக்கும் ?


Jagan (Proud Sangi)
மார் 06, 2025 19:56

இங்கே இது போன்ற சட்டம் இருந்தால் தீய முக கைதுக்கு பதில் தூக்கு தான். அங்கே எங்கே கோர்ட், யார் யார் சாட்சிகள் , யார் வக்கீல் ஒன்றும் வெளியே சொல்ல மாட்டார்கள். கவவுளுக்கே வெளிச்சம் இவர்கள் நிஜ குற்றவாளிகளா இல்லயா என்று


பாமரன்
மார் 06, 2025 19:18

வரவர நம்ம வெளியுறவு துறை லெட்டர் ரிசீவர் வேலையை மட்டுமே செய்யுது போல... அதோடு முக்கியமா வெளிநாட்டு வாழ் இந்தியர்கள் நலத் துறை அதுக்கு அமிச்சர்னு ஒருத்தர் இருக்காப்ல... அவர் எடுபுடி மாதிரி டிவியில் பார்த்து தூத்துக்குடி துப்பாக்கி சூட்டை தெரிஞ்சிக்கிட்டேன்னு கூட சொல்ல மாட்டேங்கறாப்ல...


என்றும் இந்தியன்
மார் 06, 2025 16:05

ஷரியா சட்டம் உடனே அமுலுக்கு வரவேண்டும் இந்தியாவில்


Pudhuvai Paiyan
மார் 07, 2025 05:58

எனக்கு ஹோர்லிக்ஸ் போதும்


sethu
மார் 06, 2025 13:58

குற்றவியல் சட்டம் இந்திய நாட்டில் ஷரியத் சட்டத்தையும் அனைவருக்கும் பயன் படுத்தி இதேபோல உடனடியான தண்டனை மரண தண்டனை அல்லது நடு வீதியில் தூக்கு அல்லது தலை துண்டிப்பு வழங்கவேண்டும். பயம் இல்லாது கொலை கொள்ளை கூலிப்படை மற்றும் பெண்கள் செய்யும் குற்றங்களுக்கும் நடு வீதியில் வைத்து தலை துண்டிப்பு அவசியம் அதும் உடனடியாக நிறைவேற்றவேண்டும் ஷரியத் சட்டம் தான் இதற்க்கு ஒரே சிறந்த வழி. நமது சட்டம் இங்கிலாந்து அமெரிக்க ஆஸ்திரேலியா நாடுகளை காப்பி அடித்தது தவறு, அரபுநாடுகளில் உள்ளது போல ஷரியத் சட்டம் இந்தியாவிற்கு வேண்டும் .


Pudhuvai Paiyan
மார் 07, 2025 06:00

நீ சேது என்று பெயர் மாற்றி கருத்து சொல்வதால் நான் நம்பிவிட்டேன்


Krish Sankaran
மார் 06, 2025 13:36

இது இந்தியாவில் கருணை மனு காலதாமதம் என காரணம் சொல்லி விடுதலை செய்து முதல்வர் சால்வை போட்டு பாராட்டி இருப்பார்


M.COM.N.K.K.
மார் 06, 2025 13:26

சில நேரங்களில் நிரபராதிக்கும் தவறான முறையால் தண்டனை கொடுத்த வரலாறும் உண்டு ஆகவேதான் இந்தியாவில் சில வழக்குகள் காலதாமதமாகும் அதற்கு காரணம் நிரபராதிகள் தண்டனை அடைந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் நமது நீதிமன்றங்கள் வழக்குகளில் காலதாமதம் எடுத்துக்கொள்ளும் சில நேரங்களில் சாட்சிகள் கூட போலியாக இருக்கும். ஆகவேதான் நமது இந்தியா நாட்டில் வழக்குகள் காலதாமதத்திற்கு காரணம் நமது நாட்டின் நீதிமன்றமே சரியான முறையான நீதிமன்றமாகும் அப்படியிருந்தும் சில நேரங்களில் தவறாகவும் போக வைப்பு உண்டு.இதுதான் உண்மை நிலையாகும் எந்தநாட்டையும் நமது நாட்டோடு ஒப்பிட்டால் அது தவறான கருத்தாகும்


Bahurudeen Ali Ahamed
மார் 06, 2025 16:26

உங்களின் கருத்து ஒரு வகையில் சரியென்றாலும், கொலைக்குற்றவாளியென்று நிரூபிக்கப்பட்டவன் ஜாமினில் வெளிவந்து இன்னொரு கொலை செய்கிறான், உணர்ச்சிவசப்பட்டு கொலை செய்தாலும் கொலை கொலைதான் சிலர் பணத்திற்காக திட்டமிட்டு கொலைசெய்கிறார்கள் அந்தக்கொலையில் 18வயதிற்கு குறைந்த வயது உடையவர்களும் ஈடுபட்டு குறைந்த தண்டனை பெறுகிறார்கள் கடுமையான தண்டனைதான் இதற்க்கு தீர்வாக இருக்கமுடியும் கொலைசெய்துவிட்டு ரீல்ஸ் போடுகிறார்கள் கொலை செய்வதை கெத்தாக நினைக்கிறார்கள் தடாலடியாக தண்டனை கொடுக்க சொல்லவில்லை குற்றம் நிரூபிக்கப்பட்டபின்பும் சரியான தண்டனை கிடைக்கவில்லையென்றால்


rama adhavan
மார் 06, 2025 13:14

தூக்கப்பட்ட இந்த 28 பேர் மீது இல்லாத கரிசனம் விஷ ஊசி போட்டு கொன்ற அந்த நர்ஸ் மீது மட்டும் ஏன் வந்தது?


Anvar
மார் 06, 2025 13:35

அது வேற நாடு வேற கொள்கைகள் - ஒரு விஷயம் அல்ல தருஞ்சுகிட்டு பேசணும்


PR Makudeswaran
மார் 06, 2025 14:36

அது ஏமன் என்று நினைக்கிறேன்.


Pandi Muni
மார் 06, 2025 13:02

அரேபிய சட்டங்களை இந்தியாவிலுள்ள போலி அரேபியர்களுக்கு பயன்படுத்தினால் குற்றங்கள் பெருமளவு குறையும்.


Nagarajan D
மார் 06, 2025 12:35

குற்றவாளிகளுக்கு தண்டனை சரியானது தான்... நம்ம நாட்டிலும் ஒரு நீதித்துறை இருக்கிறதே. செத்தவன் அடுத்த பிறவி எடுத்துவந்து சாட்சி சொன்னாலும் நம் நீதித்துறை ஏற்றுக்கொள்ளாது... இந்திரா ப்ரியடர்ச்சினி நேருவின் மகள் கொலைக்கு பின் நடந்த கலவரத்தில் கலவரத்திற்கு காரணமானவங்களுக்கே இன்னும் தண்டனை கிடைக்கவில்லை...


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை