உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அடி கொஞ்சம் பலமா பட்டுடுச்சு; இன்னொரு விவாதம் தேவையில்லை; ஓட்டம் பிடித்தார் டிரம்ப்

அடி கொஞ்சம் பலமா பட்டுடுச்சு; இன்னொரு விவாதம் தேவையில்லை; ஓட்டம் பிடித்தார் டிரம்ப்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், துணை அதிபர் கமலா ஹாரிஸ் உடன் மற்றொரு விவாதத்தில் பங்கேற்க போவதில்லை என திட்டவட்டமாக தெரிவித்தார்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தல், நவ.,5ம் தேதி நடக்க உள்ளது. குடியரசு கட்சி சார்பில் முன்னாள் அதிபர் டொனால்டு டிரம்ப், 78, வேட்பாளராக போட்டியிடுகிறார். ஜனநாயக கட்சி சார்பில் துணை அதிபரும், இந்தியா வம்சாவளியைச் சேர்ந்தவருமான கமலா ஹாரிஸ், 59, போட்டியிடுகிறார்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=kvjsz44a&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

முதல் விவாதம்

இருவரும் முதன்முறையாக செப்.,11ம் தேதி பென்சில்வேனியா மாகாணம், பிலடெல்பியா நகரில் ஏ.பி.சி., செய்தி நிறுவனம் நடத்திய விவாதத்தில் பங்கேற்றனர். விவாதத்தின் போது டிரம்ப் ஒரு குற்றவாளி அவர் எப்படி குற்றசம்பவங்களை பேசலாம் என கமலா சரமாரி கேள்வி எழுப்பினார். அதேநேரத்தில் டிரம்ப் பைடன் ஆட்சியில் பொருளாதாரம் மோசமடைந்து விட்டது என குறை கூறினார். ஆனால் அதிபர் தேர்தல் விவாதத்தில் கமலா ஹாரிஸ் தான் வெற்றியாளர் என அந்நாட்டு ஊடகங்களில் கணிப்புகள் வெளியானது. டிரம்ப் ஆதரவாளர்களே கமலா ஹாரிஸ்தான் விவாதத்தில் ஆதிக்கம் செலுத்தினார் என்றும், டிரம்ப் திணறினார் என்றும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.

வாய்ப்பில்லை

இந்நிலையில், டொனால்டு டிரம்ப் சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது: ஒரு போட்டியாளர், போட்டியில் தோல்வியை தழுவி விட்டால், அவரது வாயிலிருந்து வரும் முதல் வார்த்தை எனக்கு மறுப்போட்டி வேண்டும் என்பதாகும். ஜனநாயக கட்சியின் வேட்பாளரான கமலா ஹாரிஸ் எனது உடன் விவாதத்தில் தோற்று விட்டார். முதல் விவாதத்திலேயே நான் வெற்றி பெற்றேன் என கருத்துக் கணிப்புகள் தெளிவாக காட்டுகின்றன. இதனால், அவர் இரண்டாவது விவாதத்திற்கு அழைப்பு விடுத்தார்.மற்றொரு விவாதத்தில் நான் பங்கேற்க போவதில்லை. இவ்வாறு டிரம்ப் கூறியுள்ளார்.இன்னொரு விவாதம் நடத்தினால் கமலா ஹாரிஸ் மேலும் முன்னிலை பெற்று விடுவார் என்ற அச்சத்தில் டிரம்ப் இவ்வாறு கூறுவதாக கருத்துக்கள் வெளியாகி உள்ளன.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

சமூக நல விரும்பி
செப் 13, 2024 12:35

First impressions is the best and final impression. So Kamala haris will win in the battle.


Kavi
செப் 13, 2024 11:59

Always western media are fraud


வல்லவன்
செப் 13, 2024 11:52

டிரம்ப் வெல்வது உறுதி. கமலா பாட்டி ஹிலாரி வரிசியில் தோற்பார். நாடக மேடை விவாதம் பயன் தராது


PR Makudeswaran
செப் 13, 2024 11:27

அமெரிக்கா மாதிரி ஊடகப் போட்டி வைத்தால்......நடக்க போவது இல்லை. நடந்தால் மோதியை மிஞ்ச எதிரணியில் ஆள் இல்லை. நம் ஊரில் ஸ்டாலினுக்கு காய்ச்சல் வந்து விடும். சீமான் அடித்து vidalaam.


Rengaraj
செப் 13, 2024 10:43

நம்ம நாட்டுல இந்த மாதிரி விவாதம் நடக்கவேண்டும். முக்கியமாக ராகுல் , அமித் ஷா , மோதி அவர்களோடு போட்டிபோட்டு பேசவேண்டும். தமிழ்நாட்டில் ஸ்டாலினோடு எடப்பாடி , அண்ணாமலை , சீமான் இவர்கள் போட்டிபோட்டு பேசவேண்டும். இப்படி பெரும்தலைவர்களை ஒரேமேடையில் அல்லது தொலைக்காட்சி விவாதத்தில் பேசவைக்க எத்தனை ஊடகங்களுக்கு தைர்யம் உள்ளது ?? ஜனநாயகம் செழித்தோங்கவேண்டும் என்றால் பத்திரிகைகளும் தொலைக்காட்சிகளும் இந்தவிஷயத்தில் ஆர்வம்காட்டவேண்டும். தேர்தல் சமயத்தில் மட்டும் ஒவ்வொரு கட்சியும் மாற்றுக்கட்சியினரை தாக்கி பேசுவதால் என்ன பிரயோஜனம் ? மக்களை குழப்பவா ??


Kumar Kumzi
செப் 13, 2024 12:03

ஸ்டாலின் ஆஹ் கேக்குற கேள்விகளுக்கு துண்டுசீட்டுல பதில் இருக்கணுமே நோ நோ மே மே ஹீஹீஹீ


Srinivasan
செப் 13, 2024 13:08

here people don't accept others views. leaders need maturity, especially dmk, congress,mamta and kejriwal


Karthikeyan P
செப் 13, 2024 10:14

ராஜன் முதல்ல உலக அரசியலை தெரிஞ்சுகுங்க


Mohan
செப் 13, 2024 10:13

ராஜன் என்ற புனைபெயரில் எழுதும் நபர் போன்றவர்களுக்கு, பிரதமர் மோடி அவர்களின் பாப்புலாரிட்டி சுத்தமாக பிடிக்கவில்லை, ஆளுமை தாங்கமுடியவில்லை என்பது புரிகிறது. அதற்காக அமெரிக்க தேர்தலில் நடக்கும் விஷயங்களுக்கு, மோடி அவர்கள் பெயரை இழுத்து மண்மூடிப்போய், வாய்தா போன விஷயங்களை பேசுவதில் இருந்து ஒன்று தெரிகிறது. "முதல்வன்" படத்தில் ரகுவரன் அர்ஜூனிடம் சொல்வது போல..."" என்னை சமாளிக்கவே முடியல இல்ல ? """ என்று நக்கலாக சொல்வது தற்சமயம் ""விடியல் இண்டி"" காரர்களுக்கும் அவர்கள் அடிவருடி விசுவாசிகளுக்கும் சரியாக பொருந்துகிறது...


R Ravikumar
செப் 13, 2024 09:51

கமலா ஒரு கம்யூனிச சிந்தனை கொண்ட பெண் . நமது தற்போதைய அரசுக்கு நிச்சயம் உறுதுணையாக இருக்க வாய்ப்பு இல்லை .


ஆரூர் ரங்
செப் 13, 2024 09:12

சென்ற தேர்தலில் ரஷ்யா உள்ளடி வேலை பார்த்தது. இம்முறை நாட்டுநலன் கருதி செயல்பட மோதிக்கு வாய்ப்பு.


rajan
செப் 13, 2024 08:30

அமெரிக்காவில் டிரம்ப் ஆதரவாளர்களே முன்பு பிடென் ஆதரவாளர்ளும் கண்மூடித்தனமாக ஆதரிப்பதில்லை இந்தியாவில் கச்சா விலை 20 டாலராக இருந்தபோதும் பெட்ரோல் விலை 100 ரூபாய் என்ற மோடியின் உத்தரவை சங்கிகள் ஆதரித்தார்கள் பண மதிப்பிழப்பீட்டின் மக்கள் தங்கள் பணத்தை வங்கியிலிருந்து எடுக்க கஷ்ட பட்டதையும் சங்கிகள் ஆதரித்தார்கள் எது உண்மையான ஜனநாயகம்


Hari
செப் 13, 2024 08:47

Mr rajan.. Pl read oil bond done by Congress rule.... Bjp is paying it


ஆரூர் ரங்
செப் 13, 2024 10:28

தேர்தல் வாக்குறுதிப்படி ஸ்டாலின் டீசல் விலையைக் குறைத்தாரா? அதிகபட்ச வரி போடுவது மாநில அரசுகள்தானே ?


Kumar Kumzi
செப் 13, 2024 12:08

யார்ர்ரா புச்சா ஒரு ஓசிகோட்டர் கொத்தடிமை கெளம்பிருக்கா நீ எவ்வளோ தா கூவுனாலும் 200 ஓவா தான் ஊப்பீ


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை