உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஒண்ணா, ரெண்டா, 1000 சதுர கி.மீ., போச்சே; ரஷ்யாவுக்கு அதிர்ச்சி தந்த உக்ரைன் ராணுவம்!

ஒண்ணா, ரெண்டா, 1000 சதுர கி.மீ., போச்சே; ரஷ்யாவுக்கு அதிர்ச்சி தந்த உக்ரைன் ராணுவம்!

கீவ்: கடந்த 2 ஆண்டுகளாக போர் நீடித்து வரும் நிலையில், தற்போது ரஷ்யாவின் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை உக்ரைன் படைகள் தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கி தெரிவித்தார். இது ரஷ்ய அதிபர் புடினுக்கு தலைவலியை ஏற்படுத்தியுள்ளது.கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா போர் தொடுத்துள்ளது. நவீன ராணுவ தளவாடங்களோ, நிதி வசதியோ இல்லாத உக்ரைன் ராணுவத்தை போர் தொடங்கிய சில நாட்களிலேயே பின்னுக்குத் தள்ளி ரஷ்யா முன்னேறியது. உக்ரைன் நாட்டின் சில மாநிலங்களை ரஷ்யப் படைகள் ஆக்கிரமித்துள்ளன. லட்சக்கணக்கான சதுர கிலோமீட்டர் பரப்பை ரஷ்ய ராணுவத்திடம் இழந்த உக்ரைன், இப்போது தான் பதிலுக்கு வேலையை காட்டத் துவங்கியுள்ளது.

1000 சதுர கி.மீ.,

ரஷ்யா எதிர்பார்க்காத இடத்தில், திடீர் தாக்குதல் நடத்திய உக்ரைன் படைகள், குர்ஸ்க் மாநிலத்தில் ஆயிரம் சதுர கிலோ மீட்டர் பரப்பளவை தங்களது கட்டுப்பாட்டில் கொண்டு வந்துள்ளன. ரஷ்ய மக்களின் 74 குடியேற்ற பகுதிகளை உக்ரைன் கைப்பற்றியுள்ளது என அந்நாட்டின் அதிபர் ஜெலன்ஸ்கியும் உறுதி செய்தார்.

புடின் ஆவேசம்

ரஷ்யாவில் உக்ரைன் படைகள் முன்னேறி வருவது குறித்து, அதிபர் புடின் கூறியதாவது: மேற்கு நாடுகளின் ஆதரவுடன் இந்த தாக்குதலை உக்ரைன் அரங்கேற்றி உள்ளது. அப்பாவி ரஷ்ய பொதுமக்கள் மீதும், அணுமின் நிலையங்களின் மீது உக்ரைன் தாக்குதல் நடத்துவது ஏற்புடையது அல்ல. எதிரிகளை அடித்து துரத்தவும், ஆக்கிரமிப்பு பகுதிகளை மீட்க ரஷ்ய ராணுவம் முன்னேறி வருகிறது.இவ்வாறு புடின் தெரிவித்தார். எனினும், ரஷ்யா நிலப்பரப்பில் உக்ரைன் படைகள் ஊடுருவி தாக்கியது, அதிபர் புடினுக்கு பெரும் பின்னடைவாக கருதப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

Vijay D Ratnam
ஆக 14, 2024 15:02

போன வாரம் வரை ஐரோப்பிய நாடுகளிடம், அமெரிக்காவிடம் எங்களை காப்பாறுங்கள், உதவி உதவி என்று கதறிக்கொண்டு இருந்தார் உக்ரைன் அதிபர் ஜெலன்ஸ்கி. எனக்கென்னவோ இவ்ளோ நாளா செம்ம அடிவாங்கி கொண்டு இருந்த உக்ரைன் திடீரென முன்னேறி ஆயிரம் சதுர கிலோமீட்டரை அதுவும் ரஷ்யாவில் உள்ளே போய் பிடித்து இருக்கிறது என்று தோன்றவில்லை. ரஷ்யா எலிக்கு எலிப்பொறிக்குள் மசால்வடை வைத்தது போல உக்ரைன் ராணுவத்தை ரஷ்யா வைத்த பொறிக்குள் கொண்டு வந்து இருக்குது என்றுதான் தோன்றுகிறது. ஒருகட்டத்தில் உக்ரைன் ராணுவம் வெளியே வராமல் சிக்கிக்கொள்ள ரஷ்ய ராணுவம் ரஷ்யாவுக்குள் வைத்து வச்சி கதற கதற வேட்டையாட போகிறது. ஆயிரம் சதுர கிமீ அதுவும் ரஷ்யாவுக்குள் பிடிக்க விடுகிறான் என்றால் கொஞ்சம் மண்டையை உபயோகப்படுத்த வேண்டாமா.


Palanisamy T
ஆக 30, 2024 11:40

நீங்கள் கூறுவது சரியாகயிருந்தாலும் உக்ரைன் தாங்கள் அவர்களிடமிழந்த மண்ணைத்தான் கைப்பற்றியுள்ளார்கள். முதலில் உக்ரைன் ராணுவம் ரசியாவின் எல்லைக்குள் புகுந்து தாக்குதல் நடத்தியே எந்த நாடும் எண்ணிப் பார்க்கவொன்று . ஒருவேளை சர்வாதிகாரி புட்டின் கணக்கு தவறுதலாக போக வாய்ப்புள்ளதே


Velan Iyengaar
ஆக 14, 2024 14:43

நம்ம அருணாச்சலப்பிரதேசத்திலேயும் 1000 சதுர கிலோமீட்டர் போச்சாம் ... அது பத்தி வாயே திறக்கமாட்றானுங்க


Nellai Ravi
ஆக 14, 2024 15:24

60 வருஷங்களுக்கு முன்னாள்


S R Rajesh
ஆக 14, 2024 15:45

போகல அங்க தான் இருக்கு. ஆனா சைனா காரன் வச்சிருக்கான்.


ஆரூர் ரங்
ஆக 14, 2024 17:40

சீனாக்காரனுக்கே தெரியாத ரகசியம்?


enkeyem
ஆக 14, 2024 19:35

அருணாச்சல பிரதேசத்தில் இந்திய நிலத்தை பறிகொடுத்தது நேரு மாமா ஆட்சியில். சும்மா உதார் விடவேண்டாம்


Almighty
செப் 13, 2024 06:22

பாக்கிஸ்தான் வசம் உள்ள காஷ்மீர், சீனா வசம் உள்ள திபெத் இது எல்லாம் எவ்வளவு கிமி என்று தெரியுமா? தெரிந்தாலும் 200ரூ உபி போல் கருத்து எழுதுவது உனது வழக்கம். Salami slicing tactics என்பது சீனா ராணுவத்தால் எத்தனை ஆண்டு நடத்தப்பட்டது என்பதையும், 60 ஆண்டுகளாக எப்படி கண்டும் காணாமல் இருந்தோம் என்பதை அறிவாயா? எத்தனை ஆயிரம் கிமீ ரோடுகள் எல்லையோரம் போடப்பட்டு salami slicing நிறுத்தப்பட்டுள்ளது என்பதை எழுத முடியுமா? இதே ரோடுகள் 10 வருடம் முன் எத்தனை கிமீ இருந்தது என்பதையும் எழுதமுடியுமா? ெ


P. VENKATESH RAJA
ஆக 14, 2024 14:31

தற்போது உக்ரைன் படை முன்னேறி வருகிறது. ரஷ்யா படைகள் பின்நோக்கி செல்கிறது


மேலும் செய்திகள்











முக்கிய வீடியோ