உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / விந்தணு தானம் மூலம் 100 குழந்தைகள் போதாது: டெலிகிராம் நிறுவனர் புது ஆபர்

விந்தணு தானம் மூலம் 100 குழந்தைகள் போதாது: டெலிகிராம் நிறுவனர் புது ஆபர்

மாஸ்கோ: 'டெலிகிராம்' சமூக வலைதள நிறுவனரான பாவெல் துரோவ், தன் விந்தணுவைப் பயன்படுத்தி செயற்கை கருத்தரித்தல் முறையில் குழந்தை பெற்றால், முழு மருத்துவ செலவை ஏற்பதுடன், சொத்திலும் பங்கு தருவதாக அறிவித்துள்ளார். ரஷ்யாவின் மிகப் பெரும் பணக்காரர்களில் ஒருவர், டெலிகிராம் நிறுவனர் பாவெல் துரோவ், 41. இவரது சொத்து மதிப்பு, 1.52 லட்சம் கோடி ரூபாய்க்கு மேல் இருக்கும் என்று மதிப்பிடப்பட்டுள்ளது. துரோவுக்கு மூன்று மனைவியர் மூலம் ஆறு குழந்தைகள் உள்ளனர். இதுதவிர, விந்தணு தானம் செய்ததன் மூலம், 100க்கும் மேற்பட்ட குழந்தைகள் இருப்பதாக அவர் தெரிவித்துள்ளார். இந்த அனைத்து குழந்தைகளுக்கும் தன் சொத்தில் சம பங்கு கிடைக்கும் என்று துரோவ் அறிவித்துள்ளார். இந்த நிலையில், குழந்தை பிறப்பை அதிகரிக்க புதிய அறிவிப்பு ஒன்றையும் அவர் நேற்று வெளியிட்டுள்ளார். அதன்படி தன் விந்தணுவை பயன்படுத்தி, குழந்தை பெறும், 37 வயதுக்குட்பட்ட பெண்களுக்கான, முழு மருத்துவ செலவையும் தானே ஏற்பதாக அவர் அறிவித்துள்ளார். உலக அளவில் ஆண்களின் விந்தணு தரம் குறைந்து வருவதால், சமூகப் பொறுப்பாக எடுத்துக்கொண்டு இத்தானத்தை துவங்கியதாக துரோவ் தெரிவித்தார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி