உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கிளப் மேற்கூரை இடிந்து 124 பேர் பரிதாப உயிரிழப்பு

கிளப் மேற்கூரை இடிந்து 124 பேர் பரிதாப உயிரிழப்பு

சான்டோ டொமிங்கோ : டொமினிகன் குடியரசில் உள்ள இரவு விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்ததில் அங்கு இசை நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் உட்பட 124 பேர் பலியாகினர்; 160 பேர் காயம் அடைந்தனர்.கரிபியன் தீவு நாடான டொமினிகன் குடியரசின் தலைநகர் சான்டோ டொமிங்கோவில் 'ஜெட் செட்' என்ற பெயரில் இரவு விடுதி உள்ளது. நேற்று முன்தினம் இரவு இங்கு நடனத்துடன் கூடிய இசை நிகழ்ச்சி நடந்தது. இதைக் காண, அரசியல்வாதிகள், விளையாட்டு வீரர்கள் உட்பட ஏராளமானோர் திரண்டனர். நேற்று அதிகாலை வரை நிகழ்ச்சி தொடர்ந்தது. அப்போது திடீரென விடுதியின் மேற்கூரை இடிந்து விழுந்தது. இதனால், ரசிகர்கள் அலறியடித்து ஓடினர். எனினும் இடிபாடுகளில் சிக்கி ஏராளமானோர் உயிருக்குப் போராடினர். இதுபற்றி அறிந்து வந்த மீட்புப்படையினர் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்டனர். எனினும் பேஸ்பால் வீரர் டோனி என்ரிச் உட்பட 124 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்; பிரே வர்கஸ் என்ற எம்.பி., உட்பட 160க்கும் மேற்பட்டோர் காயம் அடைந்தனர்.விபத்து ஏற்பட்டு, 12 மணி நேரம் ஆன பின்பும் இடிபாடுகளில் சிக்கியவர்களை மீட்புப்படையினர் மற்றும் தீயணைப்பு படையினர் தொடர்ந்து மீட்டு வருகின்றனர். இதற்கிடையே நிகழ்ச்சியை ரசித்துக் கொண்டிருந்த பொதுப்பணித்துறை அமைச்சர் எடுராடோ எஸ்ட்ரல்லாவின் மகன் உள்ளிட்டோர் மாயமாகியுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. விபத்துக்கான காரணம் தெரியவில்லை என மீட்புப்படையினர் தெரிவித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை