உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மோசடியாக கம்போடியாவுக்கு அழைத்து செல்லப்பட்ட 14 இந்தியர்கள் மீட்பு

மோசடியாக கம்போடியாவுக்கு அழைத்து செல்லப்பட்ட 14 இந்தியர்கள் மீட்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பினாம் பென்: வேலை வாங்கித் தருவதாக மோசடி செய்து கம்போடியாவிற்கு அழைத்து செல்லப்பட்ட 14 இந்தியர்களை, அந்நாட்டு போலீசார் மீட்டனர். இணையவழி மோசடியில் ஈடுபட கட்டாயபடுத்தப்பட்ட இவர்கள்,உ.பி., மற்றும் பீஹாரை சேர்ந்தவர்கள். தற்போது தொண்டு நிறுவனத்தின் பராமரிப்பில் உள்ளனர். தங்களை மீட்டு விரைவில் தாயகம் அழைத்து வரும்படி மத்திய அரசுக்கு அவர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். கடந்த சில மாதங்களில்,வேலை வாங்கி தருவதாக மோசடி செய்து கம்போடியாவிற்கு 5 ஆயிரம் இந்தியர்கள் அழைத்து செல்லப்பட்டனர். அங்கு சென்றதும், இந்தியர்களின் பாஸ்போர்ட்டை பறித்து வைத்துக் கொண்டு, இந்திய மக்களை குறிவைத்து இணைய வழி மோசடியில் ஈடுபடுமாறு அவர்களை, கிரிமினல்கள் கட்டாயப்படுத்தி உள்ளனர். இந்த மோசடியில், மத்திய அரசில் பணியாற்றி ஓய்வு பெற்ற ஊழியர் ஒருவர் ரூ.67 லட்சம் இழந்தார். இது குறித்து போலீசார் வழக்குப்பதிவு 8 பேரை கைது செய்து விசாரித்ததில் கம்போடியாவில் இருந்தவர்களுக்கு உள்ள தொடர்பை போலீசார் கண்டுபிடித்தனர். இதுகுறித்து தகவல் அறிந்த மத்திய அரசு 250 பேரை மீட்டு தாயகம் அழைத்து வந்தது. மேலும் போலியான வேலைவாய்ப்பு அறிவிப்புகளை நம்பி கம்போடியா செல்ல வேண்டாம் என இளைஞர்களுக்கு மத்திய வெளியுறவு அமைச்சகம் அறிவுறுத்தி இருந்தது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

rama adhavan
ஜூலை 20, 2024 21:50

வெளிநாடு செல்பவர்கள் அனைவரும் தாங்கள் தங்கள் சொந்த ரிஸ்கில் வெளிநாடு செல்வதாகவும் ஏஜென்ட்களால் ஏமாற்றப்பட்டால் இந்திய அரசு பொறுப்பு அல்ல என சான்று அளிக்க கட்டாயப் படுத்த வேண்டும். அப்போது தான் அரசு மீட்டாலும் கிரிமினல் நடவடிக்கை எடுக்க எதுவாக இருக்கும்.


Velan
ஜூலை 20, 2024 18:53

போகும் போது போயிட வேண்டிய து. அப்புறம் இந்திய அரசு மீட்கனும்னு கூக்குரல்


அப்புசாமி
ஜூலை 20, 2024 16:53

ஃபாரின் போறதுக்கு முன் நம்மளை விட பணக்கார நாடுகளா பாத்துப்.போங்க. நம்மளை விட லாட்டரியடிக்கும் நாடுகளுக்கு போகாதீங்க.


மேலும் செய்திகள்







அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை