உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 143 பேர் பலி

இஸ்ரேல் தாக்குதலில் காசாவில் 143 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

காசா: காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் தரை, வான் மற்றும் கடல் வழியாக நடத்திய தாக்குதலில் 143 பேர் உயிரிழந்துள்ளனர்.மேற்காசிய நாடான இஸ்ரேலுக்கும், பாலஸ்தீனத்தின் காசா பகுதியை ஆளும் ஹமாஸ் பயங்கரவாதிகளுக்கும் இடையே, 2023 அக்., 7 முதல் மோதல் நடந்து வருகிறது. மோதலை நிறுத்தும்படி இரு தரப்பையும் உலக நாடுகள் வலியுறுத்தி வருகின்றன.இஸ்ரேல் - ஹமாஸ் இடையே போர் நிறுத்த ஒப்பந்தம் எட்டப்பட்ட நிலையில், பிணைக்கைதிகளை விடுவிப்பதில் ஹமாஸ் தாமதம் காட்டியதால், இஸ்ரேல் மீண்டும் தாக்குதலில் இறங்கியது. சில நாட்களுக்கு முன்னர் இஸ்ரேலின் ஜபாலியா பகுதியில் இஸ்ரேல் ராணுவம் நடத்திய தாக்குதலில் 100க்கும் மேற்பட்டோர் உயிரிழந்தனர்.இந்நிலையில், கடந்த 12 மணி நேரத்தில் காசாவின் வடக்கு பகுதியில் இஸ்ரேல் தரை, கடல் மற்றும் வான்வெளி வாயிலாக நடத்திய தாக்குதலில் 143 பேர் உயிரிழந்துள்ளனர். ஒன்பது வீடுகள், டென்ட்கள் மற்றும் முகாம்கள் ஆகியன பலத்த சேதம் அடைந்தன. இந்த இடிபாடுகளுக்குள் ஏராளமானோர் சிக்கி உள்ளனர். ஆனால், உயிருக்கு பயந்து உறவினர்களே அவர்களை மீட்க முடியாமல் தப்பி ஓடும் நிலை அங்கு நிலவி வருகிறது.அதே நேரத்தில் பயங்கரவாத உள்கட்டமைப்புகள் மட்டும் அழிக்கப்பட்டதாகவும், அதில் ஏராளமான பயங்கரவாதிகள் உயிரிழந்து உள்ளதாகவும் இஸ்ரேல் ராணுவம் கூறியுள்ளது.மேலும், இஸ்ரேல் தாக்குதலில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 53 ஆயிரத்தை தாண்டி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

theruvasagan
மே 16, 2025 22:07

ஒரு நல்ல விவசாயி தன் பயிரை கண்ணும் கருத்துமாய் காப்பது போல பயங்ரவாதம் என்னும் நச்சுப்பூண்டை தினம் தினம் களையெடுக்கும் பணியை செய்ய இஸ்ரேல் தவறுவதேயில்லை.


Sudha
மே 16, 2025 21:23

சர்வம் நாச மயம்


SUBBU,MADURAI
மே 16, 2025 21:56

Muslim population in Israel : 19%. Jew population in Palestine : 0%. Muslim population in India : 20%. Hindu population in Pakistan : 1%. Israel is fighting for survival, like we are. Israel must win, like we must!


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை