பாகிஸ்தானில் ரசாயன ஆலையில் பாய்லர் வெடித்துச் சிதறியது; 15 தொழிலாளர்கள் பலி
பைசலாபாத்: பாகிஸ்தானில் ரசாயன தொழிற்சாலையில் பாய்லர் வெடித்ததில் 15 பேர் பலியாகினர்.இதுபற்றிய விவரம் வருமாறு; பாகிஸ்தானின் பஞ்சாபில் பைசலாபாத் மாவட்டத்தில் மாலிக்பூர் பகுதியில் ரசாயன ஆலை உள்ளது. இந்த ஆலையில் எப்போதும் போல் தொழிலாளர்கள் வேலை பார்த்துக் கொண்டு இருந்தனர்.அப்போது திடீரென ஆலையில் இருந்த கொதிகலன் வெடித்துச் சிதறியது. இதில் அங்கு வேலை பார்த்துக் கொண்டு இருந்த 15 பேர் பலியாகினர். தகவலறிந்த தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு சென்று மீட்புப் பணியில் ஈடுபட்டனர்.15 பேரின் சடலங்களை கைப்பற்றிய அவர்கள், படுகாயம் அடைந்த 7 பேரை மீட்டு, மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். சம்பவத்தை அறிந்த பஞ்சாப் முதல்வர் மரியம் நவாஸ் ஆழ்ந்த இரங்கல் தெரிவித்துள்ளார். சம்பவத்துக்கான காரணம் என்ன என்பதை கண்டறியவும் அவர் உத்தரவிட்டுள்ளார்.