உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தங்க சுரங்கத்தில் விபத்து சுமத்ரா தீவில் 15 பேர் பலி

தங்க சுரங்கத்தில் விபத்து சுமத்ரா தீவில் 15 பேர் பலி

படாங்: தென்கிழக்கு ஆசிய நாடான இந்தோனேசியாவில் உள்ளது சுமத்ரா தீவு. இங்குள்ள மேற்கு சுமத்ரா மாகாணத்தின் சோலோக் மாவட்டத்தில் உள்ளது நகரி சுங்கை அபு கிராமம். இப்பகுதியில், சட்டவிரோதமாக தங்க சுரங்கம் தோண்டும் பணி நடக்கிறது. கிராம மக்கள் ஏராளமானோர் நேற்று இந்த பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது, திடீரென பெய்த கனமழையால் நிலச்சரிவு ஏற்பட்டது. இதில் சிக்கி, 15 பேர் உயிரிழந்தனர்; 12க்கும் மேற்பட்டோர் மாயமாகினர்.தகவல் அறிந்து வந்த பேரிடர் மீட்புப்படையினர் மீட்புப்பணியில் ஈடுபட்டனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை