உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 13 ராணுவ வீரர்கள் பலி

பாகிஸ்தானில் தற்கொலைப்படை தாக்குதல்: 13 ராணுவ வீரர்கள் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் நடத்திய தற்கொலைப்படை தாக்குதலில் 13 ராணுவ வீரர்கள் கொல்லப்பட்டனர். 10 வீரர்கள் மற்றும் 19 மக்கள் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர்.இந்தியாவுக்கு எதிராக பயங்கரவாதத்தை தூண்டிவிட்டு வரும் பாகிஸ்தானில், பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்தி வருகின்றனர். ராணுவத்தினர் மற்றும் பாதுகாப்பு படையினரை குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுகிறது.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tsjpted2&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், கைபர் பக்துன்க்வா மாகாணத்தின், வடக்கு வஜீரிஸ்தான் மாவட்டத்தில் ராணுவ கான்வாய் மீது இன்று, தற்கொலைப்படை பயங்கரவாதி ஒருவன் வெடிகுண்டு நிரப்பிய வாகனத்துடன் புகுந்து அதனை வெடிக்கச் செய்தான். இதில் 13 ராணுவ வீரர்கள் உயிரிழந்தனர். 10 ராணுவ வீரர்களும், 10 அப்பாவி மக்களும் காயமடைந்து மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகின்றனர். மேலும் இந்த தாக்குதலில், அங்கிருந்த 6 வீடுகள் சேதம் அடைந்தன. இதில் ஆறு குழந்தைகளுக்கு காயம் ஏற்பட்டது. சிலரின் நிலைமை கவலைக்கிடமாக உள்ளதால், பலி எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.இந்த தாக்குதலுக்கு எந்த பயங்கரவாத அமைப்பும் பொறுப்பு ஏற்கவில்லை. இருப்பினும் அந்த பகுதியில் அடிக்கடி தாக்குதல் நடத்தும் தெஹக்ரீக் ஐ தலிபான் பாகிஸ்தான் அமைப்புக்கு இதில் தொடர்பு இருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

Ramesh Sargam
ஜூன் 28, 2025 20:27

நாயை குளிப்பாட்டி நடு வீட்டில் விட்டாலும், அது தன் வாலை சுருட்டிக்கொண்டு மீண்டும் நடுவீதியில் போய் படுத்துக்குமாம். அதுபோல இந்த பாக்கிஸ்தான்.


V RAMASWAMY
ஜூன் 28, 2025 19:21

EVIL COMES TO EVIL.


அப்பாவி
ஜூன் 28, 2025 19:19

பாகிஸ்தானை நாம குண்டு போட்டு அழிக்க வாணாம். அவனுக்கு அவனுங்களே குண்டு வெச்சுப்பாங்க.


Kumar Kumzi
ஜூன் 28, 2025 16:57

வரே வாவ் சூப்பர்


சங்கி
ஜூன் 28, 2025 16:16

செய்தியை படிக்க பார்க்க கண்ணும் காதும் குளிருது


அசோகன்
ஜூன் 28, 2025 16:01

கத்திய எடுத்தவன் கத்திலதான் சாவான்....... பாக்கிஸ்தானுக்கும் அதே நிலைதான்....... பாவம் இங்கவுள்ள கொத்தடிமை கூடம்