உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / புலம்பெயர்ந்தவர்களுக்கு மேலும் 18 மாதங்கள் தற்காலிக பாதுகாப்பு ; முந்திக் கொண்ட பைடன்

புலம்பெயர்ந்தவர்களுக்கு மேலும் 18 மாதங்கள் தற்காலிக பாதுகாப்பு ; முந்திக் கொண்ட பைடன்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் புலம்பெயர்ந்த 9 லட்சம் பேருக்கு மேலும் 18 மாதங்கள் நிவாரணத்தை அறிவித்து அமெரிக்க அதிபர் பைடன் உத்தரவிட்டுள்ளார். அமெரிக்க அதிபர் தேர்தலில் குடியரசு கட்சியைச் சேர்ந்த டிரம்ப் வெற்றி பெற்றார். இதையடுத்து, அவர் வரும் 20ம் தேதி அமெரிக்காவின் அதிபராக பொறுப்பேற்க உள்ளார். அதுவரையில் அரசு நிர்வாகத்தை பைடன் தலைமையிலான ஆட்சியாளர்களே கவனித்து வருகின்றனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ghi8e1an&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0பைடன் தனது ஆட்சி முடிவதற்குள், டிரம்ப்புக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் சில திட்டங்களை வேக,வேகமாக நிறைவேற்றி வருகிறார். அந்த வகையில், வெனிசுலா, உக்ரைன், சூடான் உள்ளிட்ட 17 நாடுகளில் இருந்து சுமார் 9 லட்சம் பேர் அமெரிக்காவுக்கு புலம் பெயர்ந்துள்ளனர். இவர்கள் இங்கு தங்கி, தொழில் புரிந்து வருகின்றனர். 2021ம் ஆண்டு முதல் பைடன் அரசு இவர்களுக்கு தேவையான உதவிகளை செய்து கொடுத்தது.ஆனால், புலம்பெயர்ந்தவர்களுக்கு வழங்கப்படும் தற்காலிக பாதுகாப்பு நிலையை அதிபராக தேர்வு செய்யப்பட்டுள்ள டிரம்ப் விரும்பவில்லை. அதனை கடுமையாக எதிர்த்து வருகிறார். இந்த நிலையில், புலம்பெயர்ந்தவர்கள் தொடர்ந்து அமெரிக்காவில் குடியிருக்கவும், தொழில் புரியவும் மேலும் 18 மாதங்களுக்கு பைடன் அனுமதியளித்துள்ளார். இது டிரம்ப்புக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Ramadurai
ஜன 11, 2025 14:15

Not possible. It will take one year to change


sankaranarayanan
ஜன 11, 2025 10:18

பைடன் கொண்டுவந்த 18 மாத தற்காலிக பாதுகாப்பு என்பதை டிரம்பு ஆட்சிக்கு வந்ததும் 18 - நாட்களே என்றே மாற்றிவிடுவார் ஜாக்கிரதை பைடன் கொண்டுவந்த தீர்மானம் சோடையாகிவிடும்


Nandakumar Naidu.
ஜன 11, 2025 10:01

டிரம்ப் பதயேற்றால் இந்த சலுகையை மாற்றியமைக்க முடியாதா?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை