உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் அமெரிக்க விமானம் கவிழ்ந்ததில் 18 பேர் படுகாயம்

கனடாவில் அமெரிக்க விமானம் கவிழ்ந்ததில் 18 பேர் படுகாயம்

டொரன்டோ,அமெரிக்காவின் மின்னியாபோலிஸ் நகரிலிருந்து, கனடா நாட்டின் டொரன்டோவுக்கு வந்த, டெல்டா நிறுவனத்தின் பயணியர் விமானம், தரையிறங்கும்போது தலைகீழாக கவிழ்ந்ததில், 18 பேர் காயமடைந்தனர்; மூன்று பேர் படுகாயங்களுடன் மீட்கப்பட்டனர்.அமெரிக்காவின் டெல்டா விமான நிறுவனத்திற்கு சொந்தமான பயணியர் விமானம், 80 பயணியருடன், கனடாவின் டொரன்டோ நகரில் உள்ள பியர்சன் சர்வதேச விமான நிலையத்தில் நேற்று முன்தினம், அந்நாட்டு நேரப்படி, பகல் 3:30 மணிக்கு தரையிறங்கியது. அப்போது, விபத்துக்குள்ளாகி தலைகீழாக கவிழ்ந்தது. இதில், குழந்தை உட்பட 18 பேர் காயம் அடைந்தனர். அந்த விமானத்தில் பயணம் செய்த, 80 பேரில், மூன்று பேர் மட்டுமே படுகாயம் அடைந்தனர்.விமான நிலையத்திலேயே விபத்து நேர்ந்ததால், உடனடியாக மீட்புப் பணிகள் துவங்கின. விமானத்தின் உள்ளே சிக்கியவர்கள், பத்திரமாக மீட்கப்பட்டனர். உயிரிழப்பு ஏதும் நிகழ்வில்லை.சி.ஆர்.ஜே., 900 என்ற அந்த பயணியர் விமானத்தை, கனடா நாட்டின், 'பாம்பார்டியர்' என்ற நிறுவனம் தயாரித்து இருந்தது.விபத்துக்குள்ளான அந்த விமானம் தரையிறங்கும்போது, பலமான காற்றுடன் பனிப்புயல் வீசியதாக விமான நிலைய அதிகாரிகள் கூறினர். விபத்தால், இந்த விமான நிலையத்திற்கு வந்த மற்றும் விமான நிலையத்திலிருந்து புறப்பட்ட 40க்கும் மேற்பட்ட விமானங்கள் தாமதமாகின.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி