வங்கதேச இடைக்கால அரசில் முக்கிய பதவி வகித்த இருவர் திடீர் ராஜினாமா!
டாக்கா: வங்கதேச இடைக்கால அரசில் முக்கிய பதவிகளை வகித்த இருவர் தங்கள் பதவிகளை ராஜினாமா செய்துள்ளனர்.வங்கதேசத்தில் 2026ம் ஆண்டு பிப்ரவரியில் தேர்தல் நடைபெறும் என்று அந்நாட்டின் தேர்தல் கமிஷன் அறிவித்து இருக்கிறது. எனவே, அரசு நிர்வாகத்தை வழிநடத்தி வரும் தற்போதைய இடைக்கால அரசில் பதவி வகிப்பவர்கள் வரும் தேர்தலில் போட்டியிட முடியாது. இந் நிலையில், இடைக்கால அரசில் முக்கிய துறைகளில் ஆலோசகர்களாக இருக்கும் மஹ்புஜ் ஆலம், ஆசிப் மஹ்மூத் சஜிப்புயன் ஆகியோர் தங்கள் பதவிகளில் இருந்து ராஜினாமா செய்துள்ளனர். இதில், மஹ்புஜ் ஆலம் தகவல் ஒளிபரப்புத் துறையிலும், ஆசிப் மஹமூத் சஜிப்புயன் கூட்டுறவு, உள்ளாட்சி, விளையாட்டு துறையிலும் ஆலோசகர்களாக இருந்தவர்கள்.இவர்கள் இருவரின் ராஜினாமா கடிதங்களை இடைக்கால அரசின் தலைமை ஆலோசகர் முகமது யூனுஸ் ஏற்றுக் கொண்டதாக அரசு தரப்பில் அறிவிக்கப்பட்டுள்ளது.