உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அடச்சே, இப்படியுமா இருப்பாரு அப்பா; காருக்குள் துடிதுடித்த பச்சிளம் குழந்தை: கேட்கவே உடல் நடுங்கும் கொடுமை!

அடச்சே, இப்படியுமா இருப்பாரு அப்பா; காருக்குள் துடிதுடித்த பச்சிளம் குழந்தை: கேட்கவே உடல் நடுங்கும் கொடுமை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: தந்தை வீடியோ கேமில் மூழ்கிய நிலையில், காருக்குள் வெப்பத்தில் துடிதுடித்து 2 வயது குழந்தை உயிரிழந்த சம்பவம் அமெரிக்காவில் நடந்துள்ளது. முந்தைய காலத்தில் ஒரு வீட்டில் 10க்கு மேற்பட்ட குழந்தைகள் இருந்தனர். அப்போது கூட பெற்றோர் குழந்தைகளை பார்த்து பார்த்து வளர்த்தனர். தற்போதைய காலத்தில், ஒரு வீட்டில் 2 குழந்தைகள் தான் உள்ளனர். ஆனால் பெற்றோர் குழந்தைகள் மீது கவனம் செலுத்தாமல், வேலை மற்றும் மொபைல் போன் உள்ளிட்டவற்றில் மூழ்கி போகியுள்ளனர். பெற்றோர் அஜாக்கிரதையால், ஆழ்துளை கிணறு உள்ளிட்டவற்றில் குழந்தைகள் உயிரிழக்கும் சம்பவம் அதிகம் நடக்கின்றன.

காருக்குள் குழந்தை

அந்தவகையில், அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தில் உள்ள நகர்ப்புற பகுதி ஒன்றில், வெளியில் சென்றிருந்த தாய் வீட்டுக்கு வந்து பார்த்த போது காரில் அவரது குழந்தை மூச்சுப் பேச்சின்றி கிடந்துள்ளது. குழந்தையை மீட்டு தாய் மருத்துவமனைக்கு சென்றார். அப்போது குழந்தை உயிரிழந்துவிட்டது என டாக்டர்கள் தெரிவித்தனர். குழந்தை 42.7 டிகிரி செல்சியஸ் வெப்பத்தால், துடிதுடித்து உயிரிழந்தது தெரிய வந்தது.

வீடியோ கேம்

குழந்தையின் தந்தை, வீட்டின் முன் காரை நிறுத்திவிட்டு சென்றுள்ளார். குழந்தையை காரில் விட்டுவிட்டு, வீட்டுக்குள் சென்றவர் மறந்தபடி வீடியோ கேமில் மூழ்கியுள்ளார். காரில் 3 மணி நேரத்திற்கு மேலாக, ஏசி ஓடாத நிலையில், குழந்தை வெப்பத்தில் துடிதுடித்து உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

D.Ambujavalli
ஆக 03, 2024 16:31

பேரக்குழந்தையை காரில் விட்டுவிட்டு, casino வில் சூதாடச்சென்ற ஒரு தாத்தாவின் செய்தி ஒருமுறை வந்தது இன்று எங்கும் செல்லாமல், உலகையே மறந்து பெற்ற குழந்தையைக் கூட நினைக்காமல் வீட்டுக்குள்ளேயே சூதாட்டம் வந்துவிட்டது


வாய்மையே வெல்லும்
ஆக 03, 2024 12:11

குழந்தையின் அருமை சிசு கிடைக்கவேண்டிய வேளையில் கிட்டாமல் " பெர்டிலிட்டி கிளினிக் க்கு" நடையாய் நடக்கும் இளம் திருமண தம்பதியினரை கேளப்பா மூடனே. உன்னோட விடீயோ விளையாட்டு உன்னோட குழந்தை செல்வதை நீ இழக்க நேரிட்டது மிகவும் துயர சம்பவமே .


RAMAKRISHNAN NATESAN
ஆக 03, 2024 14:11

நல்லா சொன்னீங்க ....... வெள்ளையர்களை நமது அந்நாள் குடிமக்கள் மிலேச்சர்கள் என்று குறிப்பிடுவார்கள் ... அவர்களது இன்றைய கலாச்சாரம் இந்தியாவிலும் எப்போதோ பரவிவிட்டது ......


Nandakumar Naidu.
ஆக 03, 2024 12:00

வீடியோ கேம்களை இந்தியாவில் முற்றிலும் தடை செய்ய வேண்டும். மீறினால் ஆயுள் தண்டனை கொடுக்க வேண்டும்.


தமிழ் நாட்டு அறிவாளி
ஆக 03, 2024 11:27

நீயெல்லாம் இங்க இருக்க வேண்டிய ஆளே இல்ல !


மேலும் செய்திகள்









அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை