உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஆஸ்திரேலியா மார்க்கெட்டில் கண்மூடித்தனமாக தாக்குதல் 100 முறை சுட்டதில் 20 பேர் காயம்

ஆஸ்திரேலியா மார்க்கெட்டில் கண்மூடித்தனமாக தாக்குதல் 100 முறை சுட்டதில் 20 பேர் காயம்

சிட்னி: ஆஸ்திரேலியாவின் பரபரப்பான தெருவில் பொதுமக்களை நோக்கி ஒருவர் துப்பாக்கியால் 100 முறை சுட்டதில், 20 பேர் காயமடைந்தனர்.ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரின் மேற்கு புறநகர் பகுதியான க்ரோய்டன் பார்க்கில் உள்ள வ ணிக வளாகத்தின் ஒரு பகுதியில் குடியிருப்பும் உள்ளது. இங்கு வசித்து வந்த 60 வயதுடைய ஒருவர், நேற்று முன்தினம் மாலை, அங்குள்ள தெருவில் சென்ற பொதுமக்கள், கார்கள் மற்றும் போலீஸ் வாகனங்கள் மீது கண்மூடித்தனமாக துப்பாக்கியால் சுட்டார். இவ்வாறு அவர், 100 முறை சுட்டதாக கூறப்படுகிறது. இந்தத் தாக்குதலில், 20 பேர் காயமடைந்தனர். இதையடுத்து விரைந்து வந்த போலீசார் அந்த நபரை கைது செய்ததுடன், அவரிடம் இருந்து இரண்டு துப்பாக்கிகளை பறிமுதல் செய்தனர். கைது செய்யப்பட்ட நபர் துப்பாக்கிச் சூடு நடத்தியதற்கான காரணங்கள் தெரியவில்லை என்றும், இது பயங்கரவாத செயலோ அல்லது கும்பல்களுக்கு இடையேயான சண்டையோ இல்லை என்று போலீசார் தெரிவித்தனர். இரண்டு மணி நேரம் அந்த நபர் சுட்டதாகவும், இது சினிமாவில் வரும் காட்சிகள் போல் இருந்ததாகவும் சம்பவத்தை நேரில் பார்த்த மக்கள் போலீசாரிடம் விவரித்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
அக் 07, 2025 12:41

அமெரிக்காவில் மட்டும்தான் சுட்டுச்சுட்டு விளையாடுவார்களா, இங்கே நாங்களும் சுட்டுச்சுட்டு விளையாடுவோம்.


முக்கிய வீடியோ