உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஊழல்வாதிகளை தண்டிக்க 200 சிறைகள்

ஊழல்வாதிகளை தண்டிக்க 200 சிறைகள்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

பீஜிங்: சீனாவில் ஊழல் வழக்குகளில் கைதானவர்களை அடைக்கும் வகையில், 200க்கும் மேற்பட்ட சிறைச்சாலைகளை அந்நாட்டு அரசு கட்டமைத்துள்ளது.நம் அண்டை நாடான சீனாவில், அதிபர் ஷீ ஜின்பிங் தலைமையில், சீன கம்யூ., கட்சியின் ஆட்சி நடக்கிறது.இங்கு, தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர் ஆட்சி நடத்தி வரும் நிலையில், நாடு முழுதும் ஊழலை ஒழிக்கும் நடவடிக்கைகளை தீவிரப்படுத்தி உள்ளார்.ஊழல் தடுப்பு நடவடிக்கையாக, கட்சி பாகுபாடின்றி அனைத்து தரப்பினரையும் சீன அரசு கண்காணித்து வருகிறது. சமீபத்தில், அந்நாட்டின் பணக்காரர்களில் ஒருவரான பாவ் பேன், முன்னாள் கால்பந்து நட்சத்திர வீரர் லீ டை உள்ளிட்டோர் ஊழல் குற்றச்சாட்டில் கைதான நிலையில், அவர்களுக்கு தலா 20 ஆண்டு சிறை தண்டனை விதிக்கப்பட்டது.அவ்வாறு ஊழல் வழக்குகளில் கைதாவோர், குறைந்தபட்சம் ஆறு மாத சிறை தண்டனையை அனுபவிப்பது கட்டாயம் என்ற நிலை உள்ளது. அக்காலக்கட்டங்களில் அவர்கள் சட்டரீதியில் வெளியே வரவும், குடும்பத்தினரை சந்திக்கவும் சீன அரசு தடை விதித்துள்ளது.இதற்காக, குய்சோவ் மாகாணத்தின் லியுஷி பகுதியில், 200க்கும் மேற்பட்ட சிறைச்சாலைகளை சீன அரசு கட்டமைத்துள்ளது.கடந்த 2017 முதல் 218 சிறைச்சாலைகளை சீனா கட்டியுள்ளது. குறிப்பாக கொரோனா தொற்றை கட்டுக்குள் கொண்டு வந்தபின், இந்த சிறைச்சாலைகளை கட்டமைக்கும் பணியை அந்நாடு வேகப்படுத்தியது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

D.Ambujavalli
டிச 30, 2024 06:07

இந்தியாவுக்கு 500 கூடப் போதாது நம் ஊழல்வாதிகளுக்கு aircondition செய்து, shopping , வசதி. , உணவில் pineapple கேசரியுடன் கவனிக்க வேண்டுமே நம் ஆண்டு பட்ஜெட் தாங்குமா?


D.Ambujavalli
டிச 30, 2024 06:02

இங்குள்ள ஊழல்வாதிகளுக்கு special சிறைகள், குறைந்தது 500, குளிர்சாதனம், shopping வசதி, பைனாப்பிள் கேசரி என்று எல்லா வசதிகளுடன் தயார் செய்ய வேண்டுமென்றால் அரசு கஜானாவே காலியாகிவிடுமே யோசிக்க வேண்டிய விஷயம்தான்


D.Ambujavalli
டிச 30, 2024 06:02

இங்குள்ள ஊழல்வாதிகளுக்கு special சிறைகள், குறைந்தது 500, குளிர்சாதனம், shopping வசதி, பைனாப்பிள் கேசரி என்று எல்லா வசதிகளுடன் தயார் செய்ய வேண்டுமென்றால் அரசு கஜானாவே காலியாகிவிடுமே


சிட்டுக்குருவி
டிச 30, 2024 01:59

இந்தியாவிற்கும் அவ்வளவு ஜெயில்கள் புதியதாக தேவைப்படும்.அரசு இப்போதே ஆரம்பிக்கலாம். கூடவே கூடுதல் விசாரணை குழுக்களையும் தயார் செய்யலாம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை