உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை; 4 மாதங்களில் 4 பேர் உயிரிழப்பு!

கனடாவில் இந்திய மாணவி சுட்டுக்கொலை; 4 மாதங்களில் 4 பேர் உயிரிழப்பு!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடாவில் துப்பாக்கிச் சூடு சம்பவத்தில், இளம் இந்திய மாணவி ஹர்சிம்ரத் ராதாவா , 21, சுட்டுக்கொல்லப்பட்ட சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.கனடாவில் உள்ள ஆண்டாரியோ மாகாணம் ஹமில்டன் நகரில் உள்ள மொஹ்வாக் கல்லூரியில் இந்தியாவை சேர்ந்த ஹர்சிம்ரத் ராதா என்ற பெண் கல்வி பயின்று வந்தார். இவர் நேற்று இரவு 7.30 மணியளவில் சவுத் பெண்ட் சாலையில் பஸ்சுக்காக காத்திருந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=6p74hbmw&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அங்கு இரு கார்களில் வந்த நபர்களுக்கு இடையே துப்பாக்கி சண்டை நடைபெற்றது. இரு தரப்பினரும் சரமாரியாக துப்பாக்கி சூடு நடத்தினர். அப்போது எதிர்பாராத விதமாக பஸ்சுக்கு காத்திருந்த இந்திய மாணவி ஹர்சிம்ரத் ராதாவா மீது துப்பாக்கி குண்டு பாய்ந்தது. இந்த சம்பவத்தில் படுகாயமடைந்த ஹர்சிம்ரத்தை மீட்ட அங்கிருந்தவர்கள் மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். இது குறித்து போலீசார் தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

தூதரகம் வருத்தம்

''ஹாமில்டனில் இந்திய மாணவி ஹர்சிம்ரத் ராதாவாவின் துயர மரணத்தால் நாங்கள் மிகவும் வருத்தமடைந்துள்ளோம். மாணவியின் குடும்பத்தினர் உடன் தொடர்பில் இருக்கிறோம். அவர்களுக்கு அனைத்து உதவிகளும் செய்யப்படும்'' என்று டொராண்டோவில் உள்ள இந்திய துணைத் தூதரகம் தெரிவித்துள்ளது.

4 பேர் உயிரிழப்பு

கடந்த 4 மாதங்களில் கனடாவில் நான்கு இந்தியர்கள் கொல்லப்பட்டனர்.* டிசம்பர் 1ம் தேதி 2024ம் ஆண்டு, பஞ்சாபின் லூதியானாவைச் சேர்ந்த 22 வயது முதுகலை மாணவர் குராசிஸ் சிங் கத்தியால் குத்திக் கொல்லப்பட்டார்.* பஞ்சாபைச் சேர்ந்த 22 வயது இந்திய மாணவி ரித்திகா ராஜ்புத் மரம் விழுந்து இறந்தார். இந்த சம்பவம் குறித்து விசாரணை நடத்தி வருவதாக போலீசார் தெரிவித்தனர்.* டிசம்பர் 6ம் தேதி, எட்மண்டனில் 20 வயது இந்திய வம்சாவளியைச் சேர்ந்த ஹர்ஷன்தீப் சிங், ஒரு கும்பலால் சுட்டுக் கொல்லப்பட்டார்.* இன்று (ஏப்ரல் 19) இளம் இந்திய மாணவி ஹர்சிம்ரத் ராதாவா, 21, சுட்டுக்கொல்லப்பட்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

naranam
ஏப் 20, 2025 09:32

இது தான் கனடா நாட்டின் லட்சணம். இந்த அழகில் இந்தியாவுக்கு வந்து சென்ற கனடா நாட்டுச் சுற்றுலாப் பயணி அதிர்ச்சியடைந்தார் என்று வேறு செய்தி..


என்றும் இந்தியன்
ஏப் 19, 2025 20:00

கனடான்னா கனடா தான்... தீவிரவாத கனடான்னா பேரு சரியாக இருக்கும். எப்போ பார்த்தாலும் இந்தியாவின் மீது குறை சொல்லிக்கொண்டே இருப்பது


thehindu
ஏப் 19, 2025 14:29

தினமும் ஒருநாட்டுக்கு போய் கொள்ளையர்களைப்பற்றி மற்றுமே கவலைப்படும் மதவாத அரசு என்பது நிரூபணம்


Kasimani Baskaran
ஏப் 19, 2025 13:41

ஆட்சி கிட்டத்தட்ட காலிஸ்தான் கையில். பின்னர் எப்படி உருப்படும்?


Raja k
ஏப் 19, 2025 12:40

கனடாவில் நடக்கும் ஆட்சியை வன்மையாக கண்டிக்கிறோம், விரைவில் கனடாவில் உள்ள விடியா அரசு அகற்றப்பட்டு விரைவில் காவி கொடி பறக்க வேண்டும்


Kumar Kumzi
ஏப் 19, 2025 13:46

செய்தியை ஒழுங்கா படிச்சிட்டு கருத்து எழுது


sridhar
ஏப் 19, 2025 12:33

நடுவீதியில் துப்பாக்கி சண்டை. ரொம்ப பெருமையா இருக்கு , கனடாவிலும் நம் திமுக ஆட்சி தான்.


Ramesh Sargam
ஏப் 19, 2025 12:32

இந்த துப்பாக்கி கலாச்சாரம், அமெரிக்காவில் இருந்து கனடா நாட்டுக்கு பரவி இருப்பது மிகவும் அதிர்ச்சி அளிக்கிறது. இந்தியாவிலும் இந்த கலாச்சாரம் துளிர் எடுக்க ஆரம்பித்துவிட்டது. இந்திய தலைவர்கள் இந்த தேவை இல்லா கலாச்சாரத்தை முதலிலேயே கிள்ளி எறியவேண்டும். இல்லையென்றால் அமெரிக்கா கதிதான். அதாவது தினம் தினம் தீபாவளிதான்.


Padmasridharan
ஏப் 19, 2025 11:58

எதேச்சயா நடக்கிற மாதிரி பண்ணிக்கிட்டு இருக்காங்க... இந்த நாட்டு encounter மாதிரி


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை