உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 22 மாதங்கள் காசா போரில் 62,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு! சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

22 மாதங்கள் காசா போரில் 62,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு! சுகாதார அமைச்சகம் அறிவிப்பு

கெய்ரோ: 22 மாதகால காசா போரில், 62000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளதாக அந்நாட்டு சுகாதாரத் துறை அமைச்சகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து பாலஸ்தீன சுகாதார அமைச்சகம் கூறி இருப்பதாவது: 2023ம் ஆண்டு அக்டோபர் 7ம் தேதி போர் தொடங்கியது. 22 மாத போர்க்காலத்தில் 62000க்கும் அதிகமான பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டு உள்ளனர். கடந்த 24 மணி நேரத்தில் மட்டும் 60 பேர் உயிரிழந்துள்ளனர். 1,56,230 பேர் காயம் அடைந்துள்ளனர். உதவி கோரிய அல்லது நிவாரண முகாம்களில் இருந்தவர்களில் 1965 பேர் உயிரிழந்து உள்ளனர். திங்கட்கிழமை மட்டும் உதவிகளை பெற முயன்ற 7 பேர் கொல்லப்பட்டு இருக்கின்றனர். இவ்வாறு சுகாதாரத்துறை அமைச்சகம் கூறி உள்ளது. இதனிடையே, எகிப்து நாட்டின் உயர்மட்ட அதிகாரிகள், காசாவுக்கு வெளியே பாலஸ்தீனியர்களை வலுக்கட்டாயமாக மீள் குடியேற்றம் செய்யும் இஸ்ரேல் திட்டத்தை கண்டித்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

Tamilan
ஆக 18, 2025 20:48

உலக வல்லரசுக்களுக்கும் அவர்களின் வாலை பிடித்துக்கொண்டு அலையும் திரில்லிங் டாலர் பொருளாதார நாடுகளுக்கும் இது ஒரு பெருமை


Ramesh Sargam
ஆக 18, 2025 20:34

22 மாதங்கள் காசா போரில் 62,000 பாலஸ்தீனியர்கள் உயிரிழப்பு. ரஷ்யா, உக்ரைன் போரில் எத்தனை ஆயிரம் பேர் உயிரிழந்தார்களோ? மேலும் உலகின் பல நாடுகளுக்கிடையே நடந்த போர்களில் எத்தனை ஆயிரம் பேர் உயிரிழந்தார்களோ? போரில் உயிரிழந்தவர்களை விட்டு, இயற்கை சீற்றத்தில் உயிரிழந்தவர்கள் எத்தனை ஆயிரமோ? ஒருவேளை உலகம் அழியும் நேரம் வந்துவிட்டதோ?


சமீபத்திய செய்தி