உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 23 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் 18 பேர் பலி

பாகிஸ்தானில் பயங்கரவாதிகள் 23 பேர் சுட்டுக்கொலை: பாதுகாப்பு படையினர் 18 பேர் பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

இஸ்லாமாபாத்: பாகிஸ்தானில் கடந்த 24 மணி நேரத்தில் பாதுகாப்புப்படையினருக்கும், பயங்கரவாதிகளுக்கும் இடையே இருவேறு இடங்களில் நடந்த மோதல்களில், 23 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர்; பாதுகாப்பு படையினர் 18 பேர் உயிரிழந்தனர்.நம் அண்டை நாடான பாகிஸ்தானின் தென்மேற்கு பகுதியில் உள்ள பலுசிஸ்தான் மாகாணத்தில் உள்ள பலோச் விடுதலைப் படை மற்றும் இதர பிரிவினைவாத அமைப்புகள் சமீபகாலமாக பொது மக்கள் மீதான தாக்குதல்களை தீவிரப்படுத்தியுள்ளன. இதையடுத்து, கிளர்ச்சியாளர்களை ஒடுக்கும் நோக்கில், பலுசிஸ்தானின் கலாட் பகுதியில் பயங்கரவாதிகளின் பதுங்குகுழிகளை கண்டறிந்து பாதுகாப்புப் படையினர் நேற்று முன்தினம் தாக்குதல் நடத்தினர்.அப்போது அங்கு பதுங்கியிருந்த 12 பயங்கரவாதிகள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இதேபோல் ஹர்னாய் மாவட்டத்தில் பயங்கரவாத அமைப்புக்கும், பாதுகாப்பு படையினருக்கும் இடையே நடந்த மோதலில், 11 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டனர்.இதன் வாயிலாக, கடந்த 24 மணி நேரத்தில், மொத்தம் 23 பயங்கரவாதிகள் கொல்லப்பட்டதாக பாகிஸ்தானின் பாதுகாப்புப் படை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இதேபோல், இருவேறு இடங்களில் நடந்த இந்த மோதல் சம்பவங்களில், பாதுகாப்புப் படையைச் சேர்ந்த 18 வீரர்கள் சுட்டுக்கொல்லப்பட்டனர். இந்தத் தாக்குதல் சம்பவத்திற்கு இதுவரை எந்த அமைப்பும் பொறுப்பேற்கவில்லை.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 9 )

பெரிய ராசு
பிப் 02, 2025 16:20

கணக்கு சரியில்லையே 23 க்கு 23 இருந்துதான் சரி ,


நிக்கோல்தாம்சன்
பிப் 02, 2025 12:36

23 முஸ்லிம்களின் ஆன்மா சாந்தியடைய அவர்களது கடவுள் துணை புரியட்டும், 18 பயங்கரவாதிகளை கொன்றழித்த செயலுக்கு வாழ்த்துக்கள்


manu putthiran
பிப் 02, 2025 12:01

பாகிஸ்தான் ராணுவம் மற்றும் தீவிரவாதிகளை எப்படி அடையாளம் காண முடியும்?


Kasimani Baskaran
பிப் 02, 2025 11:47

41 தீவிரவாதிகள் என்பதை எப்படி பிரித்துப்போடலாம் ?


Shankar
பிப் 02, 2025 11:16

தெரிஞ்சுதானே உங்கள் அக்கம்பக்கத்து உரார்களும் சேர்ந்து ஓட்டுப்போட்டு மேலே ஏற்றினீர்கள். இப்போ கள்ளக்குடியேர்களும், கலந்த குடியேறிகளும் மாநிலத்தய் மைதானமாய் நினைத்து வாரான் போறான். சகித்துக்கொண்டு இருங்கள்.


Duruvesan
பிப் 02, 2025 09:32

சூப்பர்


SUBBU,MADURAI
பிப் 02, 2025 09:09

Islam is a religion of peace! Islamists: Spreading peace!


Svs Yaadum oore
பிப் 02, 2025 08:38

கடந்த ஆண்டு தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 75 பங்களாதேஷ் பிரஜைகள் ஜாமீன் பெற்று பிறகு காணாமல் போனார்களாம். எங்கே போனார்கள் என்றே விடியல் போலீசுக்கு தெரியாது. எந்த ஒரு நாட்டிலும் பிறநாட்டு கைதிகளுக்கு எளிதில் ஜாமின் கொடுக்க மாட்டார்கள். காரணம் தப்பித்து தலைமறைவாகி விடுவார்கள் என்பதால். ஆனால், இங்குள்ள நீதிபதிகள் சட்டவிரோத குடியேறி வங்கதேசிகளுக்கு எந்த உத்திரவாதத்தின் அடிப்படையில் ஜாமின் வழங்கினார்கள்? இவர்களுக்கு எந்த மர்ம நபர்கள் இந்திய குடியுரிமை வைத்திருக்கும் இரண்டு நபர்கள் தன் ரேஷன் கார்டு மூலம் உத்திரவாதம் கொடுத்தார்கள் ??....


Svs Yaadum oore
பிப் 02, 2025 08:34

கடந்த ஆண்டு தமிழகத்தில் கைது செய்யப்பட்ட 75 பங்களாதேஷ் பிரஜைகள் ஜாமீன் பெற்று பிறகு காணாமல் போனார்களாம் ....எங்கே போனார்கள் என்றே விடியல் போலீசுக்கு தெரியாது .....அந்த அளவுக்கு தமிழ் நாட்டில் மத சார்பின்மை சமூக நீதி விடியல் ஆட்சி ....இப்படியே போனால் தமிழ் நாட்டில் சட்டம் ஒழுங்கு கஞ்சா போதை என்று பாக்கிஸ்தான் போல மாறிவிடும் ....


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை