உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் பொருளாதார நெருக்கடி உச்சம்; 25 சதவீத பெற்றோருக்கு போதுமான உணவில்லை!

கனடாவில் பொருளாதார நெருக்கடி உச்சம்; 25 சதவீத பெற்றோருக்கு போதுமான உணவில்லை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஒட்டாவா: கனடா கடுமையான பொருளாதார நெருக்கடியில் சிக்கி தவித்து வருகிறது. 25 சதவீத பெற்றோர், தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க தங்கள் உணவை குறைத்து கொள்கிறார்கள் என ஆய்வறிக்கையில் தெரியவந்துள்ளது.வட அமெரிக்க நாடான கனடா, உலகெங்கும் இருந்து பொருளாதார மேம்பாட்டுக்காக புலம்பெயர்ந்து செல்லும் மக்களின் கனவு தேசமாக ஒரு காலத்தில் இருந்தது. அந்த நாட்டில் பின்பற்றப்பட்ட தாராள கொள்கைகள், அனைத்து நாடுகளில் இருந்தும் மக்களை ஏற்றுக் கொண்டு அரவணைத்தன. இப்போது நிலைமை வெகுவாக மாறிவிட்டது.பல்வேறு தவறான முடிவுகளை மேற்கொண்டதன் விளைவாக, அரசியல் ரீதியாகவும், பொருளாதார ரீதியாகவும் கனடா கடுமையான நெருக்கடியை எதிர்கொள்கிறது. மளிகை பொருட்கள் விலை உச்சம் தொட்டு வருகிறது. இந்த சூழலில், அங்குள்ள மக்களிடம், லண்டனை தலைமையிடமாகக் கொண்ட ஒரு சர்வதேச தொண்டு நிறுவனமான சால்வேஷன் ஆர்மி ஆய்வு ஒன்றை நடத்தி உள்ளது. இது குறித்து வெளியான ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது: 25% கனடா பெற்றோர் தங்கள் குழந்தைகளுக்கு உணவளிக்க தங்கள் உணவைக் குறைக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பணவீக்கம், உயர்ந்து வரும் நிலையில், வீட்டு வாடகைகள் மற்றும் மளிகை பொருட்கள் விலை அதிகரித்துள்ளது. இதனால் மக்கள் தங்களது அடிப்படை தேவைகளை பூர்த்தி செய்ய ஆகும் செலவு அதிகரித்து வருகிறது. நாடு முழுவதும் உள்ள குடும்பங்கள் தங்கள் அடிப்படைத் தேவைகளான உணவைக் கூட பூர்த்தி செய்ய முடியாமல் தவிக்கின்றன. 90% க்கும் அதிகமானோர் வீட்டு வாடகை உள்ளிட்ட செலவுகளை ஈடு செய்ய, தங்கள் மளிகைச் செலவைக் குறைத்துள்ளனர். பல குடும்பங்கள் உணவுப் பொருட்களின் விலை உயர்வுக்கு எதிரான போராட்டத்தின் மத்தியில் மலிவான விலையில் சத்துள்ள உணவை வாங்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளனர். பெற்றோர் தங்கள் உணவு அல்லது அத்தியாவசியத் தேவைகளை பூர்த்தி செய்ய கடுமையாக போராடுகின்றனர். இவ்வாறு அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.கடுமையான பொருளாதார நெருக்கடியை எதிர்கொள்வதை சுட்டிக்காட்டி, இந்தியர்களை உள்ளடக்கிய சர்வதேச மாணவர்களை, கனடா அரசு நாட்டை விட்டு வெளியேற்றி வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது. சால்வேஷன் ஆர்மி தொண்டு நிறுவனத்தின் செய்தித் தொடர்பாளர் ஜான் முர்ரே கூறுகையில், 'தங்களுடைய அன்றாட அடிப்படைத் தேவைகளைப் பூர்த்தி செய்வதற்கு கனடா மக்கள் மிகவும் சிரமப்படுகின்றனர்' என்பது ஆய்வில் தெரியவந்துள்ளது' என்றார்


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

K V Ramadoss
நவ 23, 2024 01:16

அப்படி யார் சொன்னா ? நாடு முழுவதும் இலவச ரேஷன் வழங்கும் நாடு இது. மக்கள் இலவசமாக அரிசியோ கோதுமையோ வாங்கும் இந்தியாவில் பட்டினி எப்படி இருக்க முடியும்.? மற்றும் அன்ன தானங்கள் பல இடங்களில் தினமும் நடக்கின்றன. நாமே நம் நாட்டை தாழ்மையாக நினைக்கும் மனோபாவம் ஏனோ இன்னும் போகவில்லை.


பட்டினத்தார் , மலையும் மலை சார்ந்த பகுதி
நவ 22, 2024 16:14

பயங்கரவாதத்துக்கு துணை போன பாகிஸ்தான் ஆப்கானிஸ்தான் பாலஸ்தீனம் போன்ற நாடுகள் அதனின் தற்போதைய நிலைமையை பார்த்து கூட கனடா காலிஸ்தான் தீவிரவாதத்துக்கு துணை போனது தான் ஆச்சரியம். பயங்கர வாத நாடுகள் அனைத்தும் இதேநிலை தான். கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்களை நம்ப முடியாது. அவர்கள் தொழிலே ஒரு நாட்டில் குறிப்பிட்ட மக்களை. குறி வைத்து அறிக்கை வெளியிட்டு அதன் மூலம் நுகர் பொருட்கள் தயாரிக்கும் பெரிய நிறுவனங்கள் மருந்து தயாரிப்பு நிறுவனங்களின் வருமானத்தை பெருக்குவது முக்கிய நோக்கம். நாட்டு மக்களிடையே பிரிவினையை தூண்டி தொண்டு நிறுவனங்கள் சார்ந்த அரசியல் வாதிகளுக்கு உதவுவது. கிறிஸ்துவ தொண்டு நிறுவனங்கள் ஒயிட் காலர் மாஃபியாக்கள்.


Esaki Sankaran
நவ 23, 2024 18:20

அருமையான பதிவு வாழ்த்துக்கள் வாழ்க வளமுடன் சால்வேசன் ஆர்மி கனடா கிருஷ்டியனுக்கு உரியது. இன்று நிலமை புரிந்து வரும் பாரத நாட்டில் இலவசம் கல்வி உணவு.நன்றி மறந்த ஜென்மங்களை மறப்போம் மன்னிப்போம்


Saravanaperumal Thiruvadi
நவ 22, 2024 11:52

பட்டினி பட்டியலில் இந்தியா கடைசி இடத்திற்கு அருகில் இருக்கிறது கனடா போன்ற நாடுகள் பட்டினி பட்டியலில் நல்ல இடத்தில் இருக்கிறது கனடாவில் 25% பெற்றோர் உணவு இல்லை என்றால் இந்திய பெற்றோர் நிலை நினைக்கவே பயமாக இருக்கிறது


கல்யாணராமன் சு.
நவ 22, 2024 19:36

அந்த பட்டினி பட்டியலில் இந்தியாவுக்கு மேல, பாகிஸ்தான் பங்களாதேஷ் இருக்குன்னா நீங்க இந்த பட்டியலை நம்புவீங்களா ?


Troo Picture
நவ 22, 2024 10:04

என்னது சால்வேஷன் ஆர்மி தொண்டு நிறுவனமா? கிருஸ்தவ மதமாற்ற நிறுவனம் அது ... தொண்டு என்ற போர்வையில்


ஆரூர் ரங்
நவ 22, 2024 11:05

சால்வேஷன் ஆர்மி இங்கிலாந்து சர்ச் களிலிருந்து ஒதுக்கப்பட்டவர்களுக்காக உருவான தனிப்பட்ட பிரிவு. ஆக அங்கும் சாதிப் படிநிலை ஏற்றத்தாழ்வு வேறுபாடுகள் உண்டு.


veeramani
நவ 22, 2024 09:43

கனடாவின் புர் வகுடிகலே .... உங்களது பிரதமமந்திரியிடம் சென்று பிச்சை கேளுங்கள் . ஒரு சில தீவிரவாதிகளை திருப்திப்படுத்துவதற்காக உலகில் பல நாடுகளையும் நல்ல நண்பர்களையும் இழந்துவிட்டது . கண் கேட்டபிறகு சூரிய நமஸ்காரம் தேவைதானா


Barakat Ali
நவ 22, 2024 08:53

இந்நிலை திடீரென்று ஏற்படலைங்க ..........


Sampath Kumar
நவ 22, 2024 08:50

இந்த எய்தி உண்மையானது இல்லை ஜோடிக்க பட்டது கனடா ஓருபோதும் வீழ்சிஜி ஆடியது அதன் அரசியில்பொருளாதாரம் உற்பத்தி என்று அணைத்து துறைகளிலும் முத்திரை பதித்து வருகின்றது இந்த செய்தி அரசியில் காழ்ப்புணர்ச்சி காரணமாக கசிய விட்டது


Prem Anand
நவ 22, 2024 10:03

தோழர் உங்களின் அறியாமையை எண்ணி நான் பரிதாபப்படுகின்றேன். நான் கனடாவில் பத்து வருடங்களாக வசிக்கின்றேன். நீங்கள் கனடாவில் வாழும் உங்களின் நண்பர்கள் உறவினர்கள் எவரேனும் இருப்பின் அவர்களிடம் விசாரித்தால் உண்மை தெரியும்.


Ravi Sundaram
நவ 22, 2024 18:59

இது பொய்யாகவே இருந்தாலும் கனடாவிற்கு தேவைதான்.


கண்ணன்
நவ 22, 2024 08:41

இந்த லச்சணத்துல தீவிரவாதிகளுக்கு ஆதரவாம்-


GMM
நவ 22, 2024 08:15

புலம் பெயர்வில் தீவிர வாதிகள் இருப்பர். காலிஸ்தான் தீவிரவாதிகள் வெளியேற்ற வேண்டும். புலம் பெயர்த்தவருக்கு இரட்டை வரி விதிப்பு. கட்டுப்பாடு இல்லாத கொள்கைகள் பொருளாதாரத்தை பாதிக்கும். மக்கள் அனைத்தையும் விலை கொடுத்து வாங்கி வாழும்போது, விலைவாசி கூடும். வாடகை கட்டுப்பாடு. ஆடம்பர வரி. புலம் பெயர்ந்தவர்களுக்கு 5 ஆண்டுகளுக்கு ஒரு முறை புதுப்பித்தல் கட்டாயம் ஆக்க வேண்டும். தேச விரோதிகளுக்கு தனி தீவு உருவாக்க வேண்டும். நிர்வாக செலவுகள் குறைக்க வேண்டும். இந்திய நட்பை வளர்க்க வேண்டும்.


SUBBU,MADURAI
நவ 22, 2024 08:13

how coverage this news got in global media


Srinivasan K
நவ 22, 2024 08:32

deep state hold on media is weaning. Trump s adminstration will throw more lights on bad things happening


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை