உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கனடாவில் மாரடைப்பால் 25 வயதான இந்திய மாணவர் மரணம்

கனடாவில் மாரடைப்பால் 25 வயதான இந்திய மாணவர் மரணம்

ஒட்டாவா: கனடாவில் படித்து வந்த ஹைதராபாத்தைச் சேர்ந்த 25 வயதான மாணவர், மாரடைப்பு காரணமாக உயிரிழந்தார்.தெலுங்கானா தலைநகர் ஹைதராபாத்தை சேர்ந்தவர் ஷாயிக் முகமது அஹமது(25). அவர் கனடாவின் ஆண்டாரியோவில் உள்ள கொனேஸ்டோகா கல்லூரியில் ஐடி பிரிவில் பட்டமேற்ப்படிப்பை, கடந்த 2022 டிச., முதல் படித்து வந்தார். கடந்த ஒரு வாரமாக அவர் காய்ச்சல் காரணமாக அவதிப்பட்டு வந்தார். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=yita8q6u&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், இன்று அவர் மாரடைப்பு காரணமாக உயிரிழந்து விட்டதாக, ஷாயிக் முகமது அஹமதுவின் குடும்பத்தை தொடர்பு கொண்ட அவரது நண்பர் தகவல் தெரிவித்துள்ளார். அவரது உடலை தாயகம் கொண்டு வர நடவடிக்கை எடுக்க வேண்டும் என குடும்பத்தினர் மத்திய வெளியுறவுத்துறை அமைச்சகத்திற்கு கோரிக்கை விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 8 )

Ramesh Sargam
பிப் 17, 2024 00:29

அமெரிக்காவில் வேறுவிதமாக - அதாவது துப்பாக்கி சூட்டில் மற்றும் கொலைவெறி தாக்குதலில் - மாணவர்கள், இந்தியர்கள் உயிர் இழக்கிறார்கள். ஆனால் இந்த மாணவர் மாரடைப்பு ஏற்பட்டு இறந்திருக்கிறார். இப்படிப்பட்ட செய்திகளை படிக்கும்போது நமக்கே மாரடைப்பு வரும் போல் இருக்கிறது. ஆண்டவா எல்லோரையும் காப்பாற்று, என்னையும் சேர்த்து.


பெரிய ராசு
பிப் 16, 2024 21:21

மாட்டுக்கறி கொழுப்பு அடைப்பு


வாய்மையே வெல்லும்
பிப் 16, 2024 15:08

வெளிநாட்டு மோகம் சிலபேருக்கு சோகத்தில் முடிவடைய நினைக்கும் போது இயற்கையின் மேல் கோபம் வருவது நியாயமே


Balaji
பிப் 16, 2024 21:43

அய்யா பஹ்ரைன் வாசியே.. நீங்கள் இருக்குர இடம் கோடியக்கரை பக்கமா இருக்கு? இதிலே எங்கேய்யா வெளிநாட்டு மோகம் எல்லாம் வந்தது.. மேற்படிப்பு படிப்பது அவர் சாமர்த்தியம்.. அதற்க்கு செலவு செய்வது அவரைப்பெற்றோர் சாமர்த்தியம்..


Barakat Ali
பிப் 16, 2024 13:45

இளமையில் மாரடைப்பு ஏற்படுவதற்கான மர்மம் விலகவில்லை ..... மருத்துவ உலகம் உடனடியாக ஆவன செய்யவேண்டும் .....


naranam
பிப் 16, 2024 16:33

கொரோனா தடுபூசீயால் கூட இத்தகைய மரணங்கள் நிகழ்வதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.


Barakat Ali
பிப் 16, 2024 19:33

தடுப்பூசியே போட்டுக்கொள்ளாதவர்களும் அகால மரணமடைந்துள்ளனர் .....


Senthoora
பிப் 16, 2024 20:09

அவருக்கு வயது ஏற்ற உடல் இல்லை, உடல் பருமன் அதிகமாக தெரிகிறார், உணவுக்கட்டுப்பாடு, போதிய உடல் பயிற்சி செய்யணும், கனடா போன்ற நாடுகளில், சீதோஷ்ண நிலை இந்தியாபோல இருக்காது. இந்தியாவில் குறைந்த நேரம் வெயிலில் நின்றாலும் போதும்.


மேலும் செய்திகள்











புதிய வீடியோ