உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / 29 நாடுகள் ஓகே; 166 நாடு பெப்பே

29 நாடுகள் ஓகே; 166 நாடு பெப்பே

பிரேசிலியா:சுற்றுச்சூழல் பாதுகாப்பு நடவடிக்கை தொடர்பான என்.டி.சி., எனப்படும் தேசிய நிர்ணயிக்கப்பட்ட பங்களிப்பு அறிக்கையை, 29 நாடுகள் மட்டுமே தாக்கல் செய்துள்ளன. இந்த அறிக்கையை, செப்., 25ம் தேதிக்குள் தாக்கல் செய்யும்படி, 166 நாடுகளுக்கு கடிதம் எழுதப்பட்டுள்ளது. அறிக்கையை தாக்கல் செய்யும்படி, நினைவூட்டல் கடிதத்தை பிரேசில் அனுப்பியுள்ளது. வரும் செப்டம்பரில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் ஐ.நா., பொது சபை கூட்டம் துவங்க உள்ளது. அதில், இந்த பிரச்னை குறித்து விவாதிக்கும் கூட்டத்தை பிரேசில் நடத்த உள்ளது. அதனால், அதற்கு முன்பாக அறிக்கையை தாக்கல் செய்யும்படி, கடிதத்தில் பிரேசில் கூறியுள்ளது. குறிப்பாக அதிகளவில் கரியமில வாயுவை வெளிப்படுத்தும் சீனா, ஐரோப்பிய யூனியன் உள்ளிட்ட நாடுகள் இன்னும் அறிக்கையை தாக்கல் செய்யவில்லை.

இலக்கை எட்டிவிட்டோம்

மத்திய சுற்றுசூழல், வனம் மற்றும் பருவநிலை மாறுபாடு இணையமைச்சர் கீர்த்தி வர்தன் சிங், லோக்சபாவில் நேற்று முன்தினம் கேள்வி ஒன்றுக்கு எழுத்து மூலமாக அளித்துள்ள பதிலில் கூறியுள்ளதாவது: பருவநிலை பிரச்னைக்கு தீர்வு காண்பதற்காக, பல நடவடிக்கைகளை அரசு மேற்கொண்டு வருகிறது. சோலார் எனப்படும் சூரிய மின்சக்தி உற்பத்தி, 41 மடங்கு உயர்ந்துள்ளது. கடந்த 2014ல் 2,820 மெகாவாட்டாக இருந்த சூரிய மின்சக்தி உற்பத்தி, 2025 ஜூன் நிலவரப்படி, 1.16 லட்சம் மெகாவாட்டாக உயர்ந்துள்ளது. நாட்டின் மொத்த மின் உற்பத்தியில், 50 சதவீதத்தை புதுப்பிக்கத்தக்க மின்சக்தியாக மாற்றுவதே இலக்கு. வரும், 2030க்குள் எட்டுவதற்கு இலக்கு நிர்ணயிக்கப்பட்ட நிலையில், அதற்கு ஐந்து ஆண்டுக்கு முன்பே எட்டியுள்ளோம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை