உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்காவில் சாலை விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு

அமெரிக்காவில் சாலை விபத்தில் 3 இந்தியர்கள் உயிரிழப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்காவில் சொகுசு கார் விபத்துக்குள்ளானதில், குஜராத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்தனர்.தெற்கு கரோலினாவின் கிரின்வில்லே கவுண்டி பகுதியில் உள்ள நெடுஞ்சாலையில், அதிவேகமாக சென்ற கார், திடீரென கட்டுப்பாட்டை இழந்து பாலத்தில் இருந்து விலகி சென்றது. அங்கிருந்து 20 அடி உயரத்திற்கு மேலே பறந்து எதிரே இருந்த மரத்தின் மீது மோதி நொறுங்கியது. இச்சம்பவத்தில் குஜராத்தின் ஆனந்த் மாவட்டத்தைச் சேர்ந்த ரேகாபென் படேல், சங்கீதா பென் படேல் மற்றும் மணிஷா பென் படேல் ஆகிய 3 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தனர். ஒருவர் மட்டும் படுகாயத்துடன் மீட்கப்பட்டு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு உள்ளார். அவரது உடல்நிலை ஆபத்தான நிலையில் உள்ளதாக டாக்டர்கள் கூறியுள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

என்றும் இந்தியன்
ஏப் 27, 2024 17:16

சாலைவிபத்தில் பேர் உயிரிழப்பு???அது என்ன இந்தியர்கள் உயிரிழப்பு???அது அரங்க இருந்திருந்தாலும் அது தான் ஆகியிருக்கும் நாம் தான் வர்களை இந்தியர்கள் என்று சொல்வோம் ஆனால் அவர்கள் க்ரீன் கார்டு அல்லது அமெரிக்க குடியுரிமை பெற்றவர்களாக இருப்பார்கள் ???


subramanian
ஏப் 27, 2024 13:23

வேகம் கொடுக்கும் த்ரில் சுவை ஆர்வ கோளாறு அவர்களின் விதி டிரைவிங் நுணுக்கங்களை அறியாத தன்மை இதனால் இந்த விபத்து


மேலும் செய்திகள்









சமீபத்திய செய்தி