உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் 30 பேர் அமெரிக்காவில் கைது

சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் 30 பேர் அமெரிக்காவில் கைது

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

சான் பிரான்சிஸ்கோ: அமெரிக்காவில் சட்டவிரோதமாக தங்கியிருந்த இந்தியர்கள் உள்ளிட்ட 49 பேரை எல்லை பாதுகாப்பு படையினர் கைது செய்தனர். அமெரிக்காவில் சட்டவிரோதமாக குடியேறியவர்கள் கனரக வாகனங்களை இயக்கும்போது ஏற்பட்ட சில உயிரிழப்பு விபத்துகளைத் தொடர்ந்து, சாலைப் பாதுகாப்பை உறுதி செய்ய 'ஆபரேஷன் ஹைவே சென்டினல்' நடத்தப்பட்டது. மேலும் சட்டபூர்வமான குடியுரிமை இல்லாத நிலையிலும், சில மாகாணங்கள் இவர்களுக்கு வர்த்தக ரீதியான டிரைவிங் உரிமங்களை வழங்கியுள்ளது குறித்து தெரியவந்தது. இதன் அடிப்படையில் கடந்த நவம்பர் 23 முதல் டிசம்பர் 12 வரையில் நடத்தப்பட்ட வாகனச்சோதனையின் போது 49 பேர் பிடிபட்டனர். இது குறித்து அமெரிக்க எல்லை பாதுகாப்புத்துறை வெளியிட்ட அறிக்கை: அமெரிக்காவில் சிலர் சட்டவிரோதமாக இருந்துகொண்டு டிரைவர் உரிமம் பெற்று சரக்கு லாரி இயக்குகின்றனர். கடந்த மாதம் 23 ஆம் தேதி முதல் டிசம்பர் 12 ஆம் தேதி வரை மேற்கொண்ட நடவடிக்கையில் மட்டும் , சட்ட விரோதமாக குடியேறி லாரி இயக்கி வந்த இந்தியர்கள் 30 பேர் உட்பட 49 பேரை கண்டறிந்து கைது செய்துள்ளோம். இந்த சோதனையில் இந்தியா தவிர சீனா, ரஷ்யா மற்றும் மெக்சிகோவைச் சேர்ந்தவர்களும் கைது செய்யப்பட்டனர். 2025ம் ஆண்டில் மட்டும் அமெரிக்காவிலிருந்து 3,200-க்கும் மேற்பட்ட இந்தியர்கள் இந்தியாவிற்குத் நாடுகடத்தப்பட்டுள்ளனர். இது கடந்த 16 ஆண்டுகளில் இல்லாத மிகப்பெரிய எண்ணிக்கையாகும். இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 5 )

NACHI
டிச 25, 2025 06:15

அடபாவிகளா அமெரிக்காவிலும் திருட்டு லைசன்ஷா


Narayanan Muthu
டிச 24, 2025 19:30

எல்லா பயலுவளும் குஜராத் மற்றும் பிஜேபி ஆளும் மாநிலத்தவர்களாகத்தான் இருப்பார்கள்.


R Dhasarathan
டிச 24, 2025 21:16

உண்மை தான் நண்பரே


R Dhasarathan
டிச 24, 2025 19:08

நான் என் அனுபவத்தில் உணர்ந்தது: உள்ளூரில் விலை போகாத மாடு வெளியூரிலும் விலை போகாது... இங்கு வேலை செய்ய ஆளில்லாமல் கஷ்ட படுகிறோம். அங்கு போங இப்படி ஏன் கஷ்ட படவேண்டும்.


nisar ahmad
டிச 25, 2025 04:13

உள்ளூரில் மாடுகளுக்கு எவ்வளவு சம்பளம் தருவீர்கள் தசரதன் சார் அதில் முக்கால்வாசி ஜி எஸ் டின்னு பிடுங்கிடுவீங்க எண்ணத்த ப்பிடுறது.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை