உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவில் துப்பாக்கிச்சூடு 30 பேர் பலி; 115 பேர் காயம்

காசாவில் துப்பாக்கிச்சூடு 30 பேர் பலி; 115 பேர் காயம்

ஜெருசலேம்: மேற்காசிய நாடான இஸ்ரேல் மீது, பாலஸ்தீனத்தின் காசாவை கட்டுப்பாட்டில் வைத்துள்ள ஹமாஸ் பயங்கரவாத அமைப்பு, 2023 அக்டோபரில் தாக்குதல் நடத்தியது. இதைத் தொடர்ந்து, ஹமாஸ் பயங்கரவாத அமைப்பின் மீது இஸ்ரேல் போர் தொடுத்தது. இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர அமெரிக்கா நீண்ட முயற்சி செய்து வருகிறது.இந்நிலையில் காசாவின் ரபா பகுதியில், அமெரிக்காவின் நிதியுதவியில் இயங்கி வரும் உதவி மையம் அருகே, இஸ்ரேல் படையினர் நேற்று துப்பாக்கிச் சூடு நடத்தினர். இதில், 30 பாலஸ்தீனியர்கள் கொல்லப்பட்டனர். மேலும் 115 பேர் பலத்த காயமடைந்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி