உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / கள்ளச்சாராயம் குடித்த 30 பேர் துருக்கியில் பலி

கள்ளச்சாராயம் குடித்த 30 பேர் துருக்கியில் பலி

அங்காரா, மேற்கு ஆசிய நாடான துருக்கியில் மதுபானங்களின் விலைகள் கடுமையாக உயர்ந்துள்ளன. இதனால் கள்ளச்சாராயம் தயாரித்து விற்பது அதிகரித்துள்ளது. இஸ்தான்புல்லில், 100க்கும் மேற்பட்டோர் இது போன்று தயாரித்து விற்பனை செய்த கள்ளச்சாராயத்தை நேற்று பருகினர். அவர்களில் 30 பேர் உடல்நலம் பாதிக்கப்பட்டு உயிரிழந்தனர். மேலும், 80க்கும் மேற்பட்டோர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர். அவர்களில் 31 பேரின் நிலைமை கவலைக்கிடமாக இருப்பதாக அந்நாட்டு ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.இந்த சம்பவத்தை தொடர்ந்து துருக்கி போலீசார் இஸ்தான்புல்லின் பல்வேறு இடங்களில் சோதனை நடத்தினர். அப்போது 26,000 லிட்டர் கள்ளச்சாராயம் பிடிபட்டது. கள்ளச்சாராயம் விற்ற ஆறு பேரை கொலை வழக்கின் கீழ் போலீசார் கைது செய்தனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

Ramesh Sargam
ஜன 17, 2025 22:25

கல்லிடைக்குறிச்சி கல்வராயன் மலையில் கள்ளச்சாராயம் குடித்து மக்கள் இறந்த போது ஆளும் திமுக அரசை எவ்வளவு சாடினீர்கள். இப்பொழுது என்ன சொல்கிறீர்கள்? அட கள்ளச்சாராயம் காய்ச்சுவது, அதை மக்கள் குடித்து இறப்பது சகஜமப்பா.. என்று ஒரு திமுக அல்லக்கை நியாயம் பேசும் இப்ப...