உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்க ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு: உயிரிழப்பு இருக்கலாம் என அச்சம்

அமெரிக்க ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு: உயிரிழப்பு இருக்கலாம் என அச்சம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

ஜார்ஜியா: அமெரிக்காவின் ஜார்ஜியாவில் உள்ள ராணுவ முகாமில் துப்பாக்கிச்சூடு நடந்தது. இதில் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்கலாம் என அஞ்சப்படுகிறது. அமெரிக்காவின் ஜார்ஜியாவில் ஸ்டீவர்ட் கோட்டை உள்ளது. இது ராணுவ முகாமாக செயல்படுகிறது. அங்கு ராணுவ வீரர்கள், குடும்பத்தினர், அங்கு பணிபுரியும் ஊழியர்கள் என 10 ஆயிரம்பேர் தங்கி உள்ளனர்.இங்கு அந்நாட்டு நேரப்படி மர்ம நபர் ஒருவர் துப்பாக்கிச்சூடு நடத்தினார். இதனால், அங்கு பரபரப்பு ஏற்பட்டது. உடனடியாக அந்த கோட்டையை மூடிய அதிகாரிகள், யாரும் உள்ளே நுழைய முடியாதவாறு நடவடிக்கை எடுத்துள்ளனர். இச்சம்பவத்தில் உயிரிழப்பு இருக்க வாய்ப்பு உள்ளது என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். துப்பாக்கிச்சூடு நடத்தியவர் உயிருடன் உள்ளே உள்ளதால், அவரை பிடிக்க பாதுகாப்பு படையினர் முயன்று வருகின்றனர். முதற்கட்டமாக 5 ராணுவ வீரர்கள் மீது துப்பாக்கிச்சூடு நடத்தப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 3 )

Kasimani Baskaran
ஆக 07, 2025 04:02

அங்கும் மர்ம நபர்கள் கைவரிசையை காட்டியிருப்பது சோகம்.


Ramesh Sargam
ஆக 06, 2025 22:57

எங்கே நம்ம வரி பயித்தியம் ? உன்வீட்டு புழக்கடையில் நடக்கும் இதுபோன்ற அவலங்களுக்கு உன்னால் ஒரு நிரந்தர தீர்வுகாணமுடியவில்லை. ஆனால் பொழுவிடிந்தால் எந்த நாடு மீது போர் துவங்கலாம், எந்த நாட்டுக்கு போர் உபகரணங்கள் விற்கலாம், எந்த நாட்டின் இறக்குமதி பொருட்களுக்கு எவ்வளவு வரிவிதிக்கலாம் என்று தூக்கத்தை கெடுத்துக்கொண்டு, உன்வீட்டு புழக்கடையில் நடக்கும் அவலங்களுக்கு ஒரு தீர்வு காணமுடியாமல் திணறுகிறாய். நீயெல்லாம் ஒரு அதிபர்.


உண்மை கசக்கும்
ஆக 06, 2025 22:53

நேத்து ஏதோ சொல்லுச்சே அந்த அறிவிலி. உங்க ராணுவத்தை பாதுகாப்பா வச்சுக்க துப்பில்ல


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை