உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / தீபாவளி கொண்டாடி மகிழுங்க: விண்வெளியில் இருந்து பறந்து வந்த வாழ்த்து: சொல்லுறது யார்னு பாருங்க!

தீபாவளி கொண்டாடி மகிழுங்க: விண்வெளியில் இருந்து பறந்து வந்த வாழ்த்து: சொல்லுறது யார்னு பாருங்க!

வாஷிங்டன்: 'பூமியிலிருந்து 260 மைல்களுக்கு அப்பால் தீபாவளியைக் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள்' என இந்திய வம்சாவளியைச் சேர்ந்த, நாசா விண்வெளி வீராங்கனை சுனிதா வில்லியம்ஸ் தெரிவித்துள்ளார்.இந்தியர்கள் கொண்டாடும் பாரம்பரிய தீபத்திருநாளான தீபாவளி பண்டிகை உலகம் முழுவதும் கோலாகலமாக கொண்டாடப்படுகிறது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அமெரிக்க வாழ் இந்தியர்களுடன் இணைந்து வெள்ளை மாளிகையில் தீபம் ஏற்றி தீபாவளியை கொண்டாடினார். இதுவரை இல்லாத அளவிற்கு நியூயார்க் முழுவதும் தீபாவளிக்கு பள்ளிகள் விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளன. சர்வதேச விண்வெளி மையத்தில் ஆய்வுக்கு சென்ற, சுனிதா வில்லியம்ஸ், உலகெங்கிலும் தீபாவளி பண்டிகையை கொண்டாடுபவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளார். அவர் கூறியிருப்பதாவது: என் அப்பா இந்தியப் பண்டிகைகள், கலாசாரத்தைக் கற்றுக்கொடுத்தார்; பூமியிலிருந்து 260 மைல்களுக்கு அப்பால் தீபாவளியைக் கொண்டாடும் வாய்ப்பு கிடைத்துள்ளது. அனைவருக்கும் தீபாவளி வாழ்த்துகள். இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 2 )

aaruthirumalai
அக் 31, 2024 13:32

தங்களுக்கு எங்களுடைய இனிய தீபாவளி நல் வாழ்த்துக்கள்! தங்களுடைய பயணம் வெற்றிபெற வாழ்த்துக்கள்!


Ramesh Sargam
அக் 29, 2024 13:02

இவ்வளவு கஷ்டத்திலும் அங்கிருந்து வாழ்த்து தெரிவித்த நீங்களும், உங்கள் கூட இருக்கும் சக நண்பரும் பத்திரமாக பூமி திரும்ப நாங்கள் அனைவரும் பிரார்த்தனை செய்கிறோம். உங்கள் இருவருக்கும் இனிய தீபாவளி வாழ்த்துக்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை