உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / "தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்": ஸ்பெயினில் முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

"தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்": ஸ்பெயினில் முதலீட்டாளர் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேச்சு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

மேட்ரிக்: ''பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன. தமிழகத்தில் முதலீடு செய்யுங்கள்'' என ஸ்பெயினில் முதலீட்டாளர்கள் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசுகையில் குறிப்பிட்டார். மேலும் மாநாட்டில் முதல்வர் ஸ்டாலின் பேசியதாவது: பொருளாதார உறவுகளை மேலும் வலுப்படுத்திடும் விதமாக உங்களுடைய முதலீடுகளை தமிழகத்தில் மேற்கொள்ள வேண்டும். தமிழகத்தில் முதலீடு செய்யும் நிறுவனங்களுக்கு அனைத்து உதவிகளையும் செய்ய தமிழக அரசு காத்திருக்கிறது. ஐரோப்பிய ஒன்றியத்தில் 4வது பொருளாதாரமாக ஸ்பெயின் திகழ்வது போல் இந்தியாவின் 2வது பொருளாதாரமாக தமிழகம் விளங்குகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=tdqj4s8e&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0

ஒற்றுமைகள்

தமிழகத்துடன் வணிக உறவுகள் மேற்கொள்ளும் ஐரோப்பிய நாடுகளில் 6வது பெரிய நாடாக ஸ்பெயின் உள்ளது. தமிழகத்துக்கும் ஸ்பெயினுக்கும் இடையே பல ஒற்றுமைகள் உள்ளன. திருவள்ளுவர் பிறந்த புகழ் பெற்ற தமிழ் மண்ணில் இருந்து வந்திருக்கிறேன். 5 ஆயிரம் ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த இலக்கிய மரபைக் கொண்டுள்ள மொழி எங்கள் தமிழ் மொழி.

காத்திருக்கும் சலுகைகள்

மக்கள் மகிழ்ச்சியாக வாழும் நாடாக ஸ்பெயின் விளங்குகிறது. காளை அடக்குதல் விளையாட்டு ஸ்பெயினின் தேசிய விளையாட்டாகவும், பாரம்பரிய விளையாட்டாகவும் விளங்குகிறது. பல்வேறு தொழில்களை மேற்கொள்ள உகந்த சூழலையும் திறன்மிக்க மனித வளத்தையும் உறுதி செய்வதோடு உயர் சலுகைகளையும் அளிக்க உள்ளோம்.

மருத்துவ சேவைகள்

வாகனங்கள், குறிப்பாக மின்வாகனங்கள், மின்னணுக் கருவிகள், தோல் பொருள்கள், தோல் அல்லாத காலணிகள், ஆடைகள் போன்றவற்றின் உற்பத்தியிலும், தகவல் தொழில்நுட்பம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, உயர் மருத்துவ சேவைகள் போன்ற பல்வேறு துறைகளிலும் இந்தியாவின் முன்னணி மாநிலமாகத் தமிழகம் திகழ்ந்து வருகின்றது.

பன்மடங்கு

இந்தத் துறைகளிலும், வான்வெளி மற்றும் பாதுகாப்பு, உயிர் அறிவியல் மற்றும் உயிரி தொழில்நுட்பம், மருந்துகள், உணவு பதப்படுத்துதல், உப்புநீக்கம் மற்றும் நீர் சுத்திகரிப்பு ஆகிய துறைகளில் உங்களின் மேலான முதலீடுகளை மேற்கொள்ளுமாறு, ஸ்பெயின் முதலீட்டாளர்களை நாங்கள் கேட்டுக் கொள்கிறேன். பெரும் தொழில் நிறுவனங்களான, ஹுண்டாய், டாடா போன்ற நிறுவனங்கள், தங்கள் முதலீடுகளை பன்மடங்கு அதிகரித்துள்ளன. இவ்வாறு ஸ்டாலின் பேசினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 42 )

Barakat Ali
ஜன 31, 2024 08:39

கட்டிங் இல்லாம எதுவும் நடக்காது ன்னு மறைமுகமாகவாவது சொல்லிட்டீங்களா ??


அப்புசாமி
ஜன 31, 2024 08:18

மொரீசியஸ் லேருந்து நிறைய முதலுடு இப்பிடித்தான் வருதாம்.


Ramesh Sargam
ஜன 31, 2024 07:52

முதல்வருக்கு முன்னாள் எவ்வளவு 'தொழில் அதிபர்கள்' உட்கார்ந்திருக்கிறார்கள் என்று புகைப்படத்தை போட்டிருக்கலாம். ஏன் என்றால், இப்ப எல்லாம் மாநாடு என்று கூட்டுகிறார்கள். ஆனால் அங்கே வெறும் காலி இருக்கைகள்தான் உள்ளன. சமீபத்திய சேலம் திமுக இளைஞரை மாநாட்டிலும் அப்படித்தான்.


Bye Pass
ஜன 31, 2024 06:30

தக்காளி பண்டிகை விசேஷம் ..கிளு கிளு ன்னு நடக்கும்


R. Vidya Sagar
ஜன 30, 2024 22:29

அது என்ன வெளியே போனால் மட்டும் திருவள்ளுவர் பிறந்த மண் என்று சொல்வது? தினமும் பெரியார் மண் என்று வாய் சவடால் எல்லாம் இங்கே மட்டும்தானா?


Vijay D Ratnam
ஜன 30, 2024 21:41

என்னையும் மதித்து ஐநூறு ரூவா கேக்குறத நினைச்சா ரொம்ப பெருமையா இருக்குதுடா தம்பி. ஆனால் ஒனக்கு கொடுக்க அஞ்சு பைசா கூட இல்லேங்குறத நினைச்சா என்ற வடிவேலு ஜோக் ஞாபகம் வருகிறது. தமிழகத்தில் முதலீடு செய்ய வாருங்கள் என்று ஃப்ரான்ஸிலோ ஜெர்மனியிலோ பிரிட்டனிலோ நார்வே சுவீடனிலோ போய் அழைத்தால் சரி. ஸ்பெயினில் போய் கூப்பிடுகிறார். ஸ்பெய்ன் ஐரோப்பாவில் அதிகளளவு வேலைவாய்ப்பில்லாத நாடு. Average income of per inhabitant of spain என்று எடுத்துக்கொண்டால் அது France, England, Germany யோடு ஒப்பிடும்போது பாதிதான். விட்டால் அடுத்த இவரு முதலீடு செய்ய வாருங்கள் என்று சோமாலியா, கென்யா, சூடான் என்று கெளம்புவாரோ.


Ranjith Rajan
ஜன 30, 2024 20:29

ஒரு ஹோட்டல் ரூம் எ புக் பண்ணி நாலு வெள்ளைக்காரனுங்கள உக்கார வெச்சா அது ஸ்பெயின் ஆ ? உண்மையிலேயே தலைவர் தானா இல்ல டூப் ஆ ?


vbs manian
ஜன 30, 2024 20:06

ஸ்டெர்லிட் ஆலை மூடல். எட்டு வழிச்சாலை இல்லை. நெற்றினோ மையம் அனுமதி இல்லை. பரந்தூர் திரி சுவர்க்கம். மின் டவர் காஸ் பைப் இவற்றுக்கெல்லாம் எதிர்ப்பு. அறிவிப்பில்லா மின் வெட்டு. யார் முதலீடு செய்வர்.


தாமரை மலர்கிறது
ஜன 30, 2024 19:41

இந்தியாவிற்கு வாருங்கள். தமிழகத்திற்குள் வந்தால், திராவிட கும்பலுக்கு கப்பம் கட்ட நேரிடும்.


theruvasagan
ஜன 30, 2024 17:26

ஸ்பெயினில் டிஸ்டிலெரிகள் அதிகம். நமக்கு அத்துபடியான தொழில்.அதில் முதலீடு வந்தால் இருதரப்பார்க்கும் லாபமோ லாபம்.. என்ன. நான் சொல்லுவது சரிதானே.


மேலும் செய்திகள்











சமீபத்திய செய்தி