உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்

நீங்கள்தான் பெஸ்ட்: மோடிக்கு இத்தாலி பிரதமர் புகழாரம்

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

'ஜி - 7' மாநாட்டுக்கு வந்த, ஐரோப்பிய நாடான, இத்தாலி பிரதமர் ஜார்ஜியா மெலோனி, பிரதமர் மோடியை சந்தித்து பேசினார். அவரை சந்தித்ததும் மகிழ்ச்சி பொங்க கைகுலுக்கிய மெலோனி, 'நீங்கள் தான் 'பெஸ்ட்'; உங்களைப் போல மாற நான் முயற்சி செய்கிறேன்' என, கூறி சிரித்தார். அப்போது, பிரதமர் மோடியும் தன் மகிழ்ச்சியை வெளிப்படுத்தினார். இந்த வீடியோ சமூக வலைதளங்களில் அதிகம் பகிரப்பட்டது. பொதுவாக, மோடி - மெலோனி சந்திப்பு இணையத்தில் எப்போதும் பேசுபொருளாக இருக்கும். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=cjoldi4r&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0அந்த வகையில், இருவர் பெயரையும் இணைத்து 'மெலோடி' என்ற 'ஹேஷ்டேக்' உடன் வேகமாக பரவி வருகிறது. மோடி - மார்க் கார்னி பேச்சு; தூதர்களை நியமிக்க ஒப்புதல்!வட அமெரிக்க நாடான கனடாவில் நடந்த, 'ஜி - 7' மாநாட்டில் பங்கேற்க சென்ற பிரதமர் நரேந்திர மோடி, அந்நாட்டு பிரதமர் மார்க் கார்னியுடன் நேற்று பேச்சு நடத்தினார். காலிஸ்தான் பயங்கரவாதி நிஜ்ஜார் கொலை வழக்கில், இரு நாடுகள் இடையிலான உறவு மோசமடைந்த நிலையில், அதை மேம்படுத்தும் வகையில் இந்த பேச்சு அமைந்தது. இது தொடர்பாக மத்திய வெளியுறவு அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கை:கனடா பிரதமர் மார்க் கார்னியை, பிரதமர் நரேந்திர மோடி சந்தித்து பேசினார். ஏற்கனவே பாதிக்கப்பட்டுள்ள இரு நாட்டு உறவுகளை மீட்டெடுப்பது குறித்து இருவரும் ஆலோசனை நடத்தினர். இரு தரப்பிலும் தூதரக அதிகாரிகளை நியமிப்பதற்கு இந்த சந்திப்பில் ஒப்புதல் மேற்கொள்ளப்பட்டது. ஜனநாயக மதிப்புகள், சட்டத்தின் ஆட்சிக்கு மரியாதை, இறையாண்மை மற்றும் பிராந்திய ஒருமைப்பாட்டின் கொள்கைகளை நிலைநிறுத்துவதற்கான உறுதிப்பாடு ஆகியவற்றின் அடிப்படையில் இந்தியா - கனடா உறவுகளின் முக்கியத்துவத்தை இரு தலைவர்களும் மீண்டும் உறுதிப்படுத்தினர். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது. இந்த சந்திப்பின் போது, காலிஸ்தான் பயங்கரவாதி ஹர்தீப் சிங் நிஜ்ஜார் கொலை குறித்து கேள்வி எழுப்பினீர்களா என பத்திரிகையாளர்கள் கேட்டதற்கு, 'இந்த விவகாரம் நீதிமன்றத்துக்கு உட்பட்டு உள்ளதால், அது குறித்து கருத்து தெரிவிக்க முடியாது' என, கார்னி கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

TR BALACHANDER
ஜூன் 19, 2025 16:38

உலகத்தில் எங்கு சென்றும் இந்தியன் என்று சொல்லி பாரு மோடிஜின் வலிமை புரியும் .....ஜெய் ஹிந்து


Prabbhu V
ஜூன் 19, 2025 13:40

அந்த அம்மாவுக்கு புரியுது நம்ம தற்குறிங்களுக்கு புரியலையே என்ன பண்றது?


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 19, 2025 15:48

நம்ம நாட்டில் இந்தனை நாட்கள் பதவியில் இருந்தும் மோடிக்கு எப்படி கைசுத்தமாக இருக்கிறது , எப்படி இருக்கலாம் ? என்ற எரிச்சல் தான் காரணம்


Ramesh Sargam
ஜூன் 19, 2025 12:57

மோடிதான் பெஸ்ட் என்று பல உலகநாட்டு தலைவர்கள் கூறி பெருமைப்படுகிறார்கள். ஆனால் நம் நாட்டில் உள்ள ஒரு சில தேசதுரோகிகள் அவரை எப்பொழுதும் வசைபாடுகிறார்கள்.


M. PALANIAPPAN, KERALA
ஜூன் 19, 2025 12:41

மோடிஜிதான் எங்கேயும் எப்பொழுதும் பெஸ்ட்


வீச்சு பரோட்டா பக்கிரி
ஜூன் 19, 2025 11:18

இந்தியாவில் ஜெலுசில் பற்றாக்குறை ஏற்பட போகிறது ..., மோடி இதுவரை 28 உயரிய விருதுகளை வெவ் வேறு நாடுகளில் இருந்து பெற்றுள்ளார் ...


தர்மராஜ் தங்கரத்தினம்
ஜூன் 19, 2025 10:55

எலோன் மஸ்க்குடன் கிசுகிசுக்கப்பட்டாரே ?? பெஸ்ட் என்பது எல்லாத்தையும் ட்ரை பண்ணிட்டு ஒரு முடிவுக்கு வருவதுதான் ....


சேகர்
ஜூன் 19, 2025 10:23

உலகம் போற்றும் உன்னத தலைவர்மோடி. எட்டு திக்கும் இவரின் பெயரே ஒலிக்கிறது... உலக நாடுகள் இவர் கண்ணசைவிற்காக காத்து கிடக்கிறது.. இது இந்தியாவின் வெற்றி வெற்றி வெற்றி


ஆரூர் ரங்
ஜூன் 19, 2025 10:13

சோனியா அதிர்ச்சி.


KavikumarRam
ஜூன் 19, 2025 09:50

கனடா, துருக்கி, அமேரிக்கா போன்ற நாடுகளை பாரதம் எப்பொழுதும் ஒரு தூரத்திலேயே வைத்து பழகவேண்டும். அவர்களால் நமக்கு நன்மை இருக்கும் தூரத்தில் மட்டுமே நமது இராஜதந்திரம் இருக்க வேண்டும். அது தான் நமக்கு நல்லது. இவர்கள் எப்பொழுதுமே நம் முதுகில் குத்தும் நாடுகள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை