உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / ஊழியர்கள் 3600 பேரை நீக்குகிறது மெட்டா!

ஊழியர்கள் 3600 பேரை நீக்குகிறது மெட்டா!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கலிபோர்னியா: மெட்டா நிறுவனத்தில் 3600 ஊழியர்களை பணிநீக்கம் செய்ய மார்க் ஜூக்கர்பெர்க் முடிவு எடுத்துள்ளார்.உலகின் முன்னணி நிறுவனங்கள் இப்போது ஏ.ஐ., எனப்படும் செயற்கை நுண்ணறிவு மீது அதிக ஆர்வம் காட்டி வருகின்றன. அதன் தாக்கம் இனி வரக்கூடிய ஆண்டுகளில் அதிகம் இருக்கும் என்றும் நம்பப்படுகிறது. https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=ww7mucn8&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்நிலையில், பேஸ்புக், insta gram, whatsapp உள்ளிட்ட சமூக வலைத்தளங்களை நடத்தும் மெட்டா நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்க் தமது நிறுவனத்தில் பணியாற்றும் 3600 ஊழியர்களை பணி நீக்கம் செய்ய முடிவெடுத்துள்ளார். இது தொடர்பாக, நிறுவனத்தின் உள் வட்டாரங்களில் ஒரு நினைவூட்டலை அவர் வெளியிட்டு உள்ளார். நிறுவனத்தின் கொள்கைகளை சீரமைக்கும் ஒரு பணியாக இந்நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்றும் குறிப்பிட்டு இருக்கிறார். அதில் பணிதிறன் மற்றும் எதிர்பார்ப்புக்கு ஏற்ற வகையில் பணிபுரியாத 5 சதவீதம் ஊழியர்களை வேலை நீக்கம் செய்ய முடிவு எடுத்துள்ளதாக மார்க் ஜூக்கர்பெர்க் குறிப்பிட்டுள்ளார். அவர்களுக்கான போதிய இழப்பீடும் அளிக்கப்படும் என்றும் அவர் உறுதி அளித்துள்ளார்.மார்க் ஜூக்கர்பெர்க் அறிவிப்பின்படி 5 சதவீதம் என்பது தற்போது நிறுவனத்தில் உள்ள 72000 பேரில் 3600 ஊழியர்கள் ஆகும். இவர்கள் அனைவரும் பணிநீக்கம் செய்யப்படுகின்றனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 6 )

தாமரை மலர்கிறது
ஜன 15, 2025 20:48

ஐந்து சதவீத கடைமட்ட தொழிலாளிகளை விடுவித்து, இந்த வருடத்திற்குள் புதிய சிறந்த தொழிலாளிகளை அமர்த்துவோம் என்று மிக அருமையான திட்டத்தை மெட்டா அறிவித்து மற்ற நிறுவனங்களுக்கு சிறந்த உதாரணமாக திகழ்கிறது. ஒவ்வொருவரிடமும் இதை செய்தால், தொய்வின்றி தொழிலாளிகள் தொண்ணுறு மணி நேரம் உழைத்து, கம்பெனியையும் நாட்டையும் உயர்த்துவார்கள். இல்லையென்றி எனக்கு கொரியா காரன் சம்பளம் குடு என்று சொல்லி தமிழகத்தில் சாம்சங் தொழிலாளிகள் போன்று போராட்டம் நடத்துவார்கள்.


Vel1954 Palani
ஜன 15, 2025 13:35

கலியுகத்தில் இவையும் எதிர்பார்த்த ஒன்றுதான்.


Rajamani K
ஜன 15, 2025 13:10

இந்தியாவிற்கும், இந்திய அரசுக்கு எதிராக, தீய சக்திகள் இந்த நிறுவனத்தில் புகுந்து டிஸின்போர்மத்தின் செய்திருக்கிறார் கள். நிறுவனம் கண்டனத்துக்குள்ளாகியது. அதன் பலனாக இருக்குமோ?


Kasimani Baskaran
ஜன 15, 2025 12:54

தீம்க்கா ஐடி விங் போல செயல்பட்டால் எவ்வளவு நாளுக்குதான் வேலை கொடுப்பது... அதுதான் கோல்டன் ஹான்ட் ஷேக்... அதாவது ஒரு ஆண்டுக்கு ஒரு மாதம் விகிதத்தில் கொடுத்து வீட்டுக்கு அனுப்பிவிடுவார்கள்.


Ramesh Sargam
ஜன 15, 2025 12:39

கொடுக்கப்படும் இழப்பீட்டை வைத்துக்கொண்டு எத்தனை காலம் வாழ்க்கையை ஓட்டமுடியும்? வயது இருந்தால் வேறு ஒரு இடத்தில் பணியில் சேரலாம். வயது அதிகம் இருந்தால் வேறு இடத்தில் வேலை கிடைப்பது மிக மிக கடினம் இந்த காலகட்டத்தில்... இருந்தாலும் அங்கு இழப்பீடு என்று ஒன்று கொடுக்கிறார்கள். இந்தியாவில் பல தனியார் அலுவலகங்களில் அது கொடுக்கப்படுவதில்லை.


xyzabc
ஜன 15, 2025 12:56

சரியாக சொன்னீர்கள்


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை