உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / காசாவின் 40 சதவீத பகுதி எங்கள் கட்டுப்பாட்டில்: இஸ்ரேல் ராணுவம்

காசாவின் 40 சதவீத பகுதி எங்கள் கட்டுப்பாட்டில்: இஸ்ரேல் ராணுவம்

ஜெருசலேம்: பாலஸ்தீனத்தின் காசாவில், 40 சதவீத பகுதியை இஸ்ரேல் ராணுவம் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருப்பதாக நேற்று தெரிவித்தது. மேற்கு ஆசிய நாடான இஸ்ரேல் மீது, கடந்த 2023 அக்டோபரில் பாலஸ்தீனத்தின் காசாவை தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருந்த ஹமாஸ் பயங்கரவாதிகள் மிக மோசமான தாக்கு தல் நடத்தினர். இதையடுத்து காசா மீது இஸ்ரேல் போரை துவங்கியது. இதில், காசாவில் இதுவரை 64,000க்கும் மேற்பட்டோர் பலியாகி உள்ளனர். இந்நிலையில், காசாவை முழுமையாக கைப்பற்றுவது தான் தங்களின் எதிர்கால பாதுகாப்புக்கு நல்லது என இஸ்ரேல் கருதுகிறது. இது குறித்து இஸ்ரேல் ராணுவ செய்தித் தொடர்பாளர் பிரிகேடியர் ஜெனரல் எபி டெப்ரின் நேற்று கூறியதாவது: இஸ்ரேல் ராணுவம் தற்போது காசா நகரில் 40 சதவீத பகுதியை கட்டுப்பாட்டில் வைத்துள்ளது. வரும் நாட்களில் தாக்குதலை மேலும் தீவிரப்படுத்த உள்ளோம். ஹமாஸை அழிப்பது, இஸ்ரேலிய பிணைக்கைதிகளை மீட்பதே எங்கள் ராணுவத்தின் முக்கிய இலக்கு. இவ்வாறு அவர் கூறினார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை