உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / உக்ரைனுக்கு 425 மில்லியன் டாலர் மதிப்பில் ஆயுத உதவி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

உக்ரைனுக்கு 425 மில்லியன் டாலர் மதிப்பில் ஆயுத உதவி: அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவிப்பு

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: ரஷ்யாவுக்கு எதிராக போரில் ஈடுபட்டு வரும் உக்ரைனுக்கு 425 மில்லியன் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். கிழக்கு ஐரோப்பிய நாடான உக்ரைன் மீது ரஷ்யா தொடர்ந்துள்ள போர், இரண்டு ஆண்டுகளைக் கடந்துள்ளது. ஏராளமான மக்கள் கொல்லப்பட்டனர். இந்தப் போரை முடிவுக்கு கொண்டு வர வேண்டும் என்று பல்வேறு நாடுகள் வலியுறுத்தி வந்தாலும், இதுவரை எந்தத் தீர்வும் கிடைக்கவில்லை. ரஷ்யாவுக்கு எதிராக போரிடும் உக்ரைனுக்கு அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு நாடுகள் ஆதரவு அளித்து வருகின்றன.அமெரிக்காவில் நவம்பர் மாதம் அதிபருக்கான தேர்தல் நடைபெற இருக்கிறது. இந்தத் தேர்தலில் அதிபர் போட்டியில் இருந்து ஜோ பைடன் விலகியுள்ளார். இந்த நிலையில், உக்ரைனுக்கு 425 மில்லியல் டாலர் மதிப்பிலான ஆயுதங்களை வழங்குவதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் அறிவித்துள்ளார். போர் விமானங்கள், டாங்கிகள் மற்றும் சக்திவாய்ந்த ஆயுதங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும், தனது பதவி காலத்தில் கடைசியாக, போர் நிலவரம் குறித்து உக்ரைனுக்கு நேரில் சென்று ஆய்வு செய்யவும் அதிபர் ஜோ பைடன் முடிவு செய்துள்ளதாக வெள்ளை மாளிகை அறிவித்துள்ளது. ஏற்கனவே உக்ரைன் வெற்றி பெறும் வரை அசைக்க முடியாத உறுதிப்பாட்டை அதிபர் பைடனும், துணை அதிபர் கமலா ஹாரிசும் வழங்குவார்கள் என வெள்ளை மாளிகை கூறியிருந்தது குறிப்பிடத்தக்கது. இதனிடையே, உக்ரைனுக்கு 425 மில்லியன் டாலர் பாதுகாப்பு உபகரணங்களை வழங்கும் அமெரிக்காவுக்கு, அதிபர் ஜெலன்ஸ்கி நன்றி தெரிவித்துக் கொண்டார்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 10 )

Ramesh Sargam
அக் 17, 2024 20:04

ஒரு பக்கம் அமைதி விரும்பும் இந்தியா உலகில் அமைதி நிலவ பல பணிகளை செய்கிறது. மறுபக்கம் அமெரிக்கா தன்னுடைய கஜானாவை நிரப்ப போர்புரியும் நாடுகளுக்கு ஆயுத உதவி செய்து, இந்தியாவின் நல்லெண்ணத்தை சீர்குலைக்கிறது. அமெரிக்கா போன்ற நாடுகள் இருக்கும்வரையில் உலகில் போர் தொடர்ந்துகொண்டுதான் இருக்கும்.


சிந்தனை
அக் 17, 2024 13:51

சாதாரணமாக நினைத்து விட வேண்டாம் ... அமெரிக்கா என்றால் என்ன .... என்று இப்பொழுதாவது எல்லோரும் புரிந்து கொண்டால் சரி...


Jysenn
அக் 17, 2024 13:28

War is a profi business.


Narasimhan
அக் 17, 2024 13:03

உதவுவதாக கூறி அந்த நாட்டையே அமெரிக்கா அழித்துவிடும். ஈராக் லிபியா சிரியா போன்ற செழிப்பான பொருளாதாரம் கொண்ட நாடுகளை நாசமாக்கிய பெருமை அமெரிக்காவை சேரும்


வைகுண்டேஸ்வரன்
அக் 17, 2024 12:30

கமலா ஹாரிசும் ஜோ பைடன் கட்சி தானே? என்ன நடக்கிறது அங்கே?


Rpalnivelu
அக் 17, 2024 11:32

உக்ரைனில் ஓரு புல்லு பூண்டு கூட முளைக்க கூடாது. டிரம்ப் வந்தால் மட்டுமே அங்கே அமைதி ஊஞ்சலாடும்.


Nandakumar Naidu.
அக் 17, 2024 09:40

உலகத்தில் போர்களை ஊக்குவிப்பதே அமெரிக்காவும், இன வெறி பிடித்த தீவிரவாதிகளும் தான். இவர்கள் இருவரும் அழிவு தான் உலகம் நிம்மதியாகவும் செழிப்பாகவும் அமைதியாகவும் இருக்கும்.


நிக்கோல்தாம்சன்
அக் 17, 2024 10:18

நிஜம்


நிக்கோல்தாம்சன்
அக் 17, 2024 09:18

உதவி என்று கூறி கடன் கொடுக்கும் யுக்தி எப்போதுதான் விலகும் ?


ஆரூர் ரங்
அக் 17, 2024 09:13

அடுத்த ஜனாதிபதிக்கு காலி கஜானாவைதான் விட்டுப் போவார். இப்போதே யு எஸ் தான் உலகின் மிகப்பெரிய கடனாளி.


புதிய வீடியோ