உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / சைபர் கிரைம் குற்றம் நடக்குது., ஜாக்கிரதை: லாவோஸ் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

சைபர் கிரைம் குற்றம் நடக்குது., ஜாக்கிரதை: லாவோஸ் செல்லும் இந்தியர்களுக்கு எச்சரிக்கை

தென்கிழக்கு ஆசியாவில் உள்ள லாவோஸ் நாட்டிற்கு பணிக்கு சென்று சைபர் கிரைம் குற்ற மையத்தில் சிக்கிய இந்தியர்கள் 50 பேர் பத்திரமாக மீட்கப்பட்டனர் .தென்கிழக்கு ஆசியநாட்டில் உள்ள லாவோசுக்கு பல இந்தியர்கள் பணி நிமித்தமாக சென்று வருகின்றனர். சமீப காலமாக இங்கு சைபர் கிரைம் குற்றங்கள் அதிகரித்து வருகிறது. இதில் இந்தியர்கள் பலருக்கு வேலை வாய்ப்பு தருவதாக பல்வேறு நிறுவனங்கள் மோசடியில் ஈடுபட்டு வருகின்றன. இதில் போகியோ என்ற மாகாணத்தின் கோல்டன் டிரையாங்கல் சிறப்பு பொருளாதார மண்டல நிறுவனம் சைபர் கிரைம் குற்றங்களை செய்து அதிகம் சம்பாதித்து வருகிறது. இந்த நிறுவனத்தில் வேலை கிடைப்பதாக 47 இந்தியர்கள் சேர்ந்தனர். பின்னர் புகாரின் அடிப்படையில் இந்திய தூதரகம் முயற்சியில் 47 பேர் மீட்கப்பட்டனர். இவர்களை லாவோசுக்கான இந்திய தூதர் பிரசாந்த் அகர்வால் சந்தித்து அறிவுரைகள் வழங்கினார். இவர்களில் 30 பேர் பத்திரமாக இந்தியா திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர். இன்னும் 17 பேர் விரைவில் அனுப்பி வைக்கப்பட உள்ளனர். இது குறித்து இந்தியர்கள் விழிப்பாக இருக்குமாறு இந்திய தூதரக அதிகாரிகள் கேட்டுள்ளனர். இந்திய தூதரக வெப்சைட்டில் https://www.indianembassylaos.gov.in/ வழங்கபட்டுள்ள அறிவுரைகளை பின்பற்றி எச்சரிக்கையாக இருக்குமாறு வேண்டுகோள் விடுத்துள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 1 )

sundarsvpr
செப் 01, 2024 15:35

வெளி நாடுகளுக்கு வேலை நிமித்தம் ஆயிர கணக்கில் செல்கின்றனர். இவர்களின் முழு விபரங்கள் அந்த அந்த நாட்டின் தூதரக அலுவலங்கைலில் பதிதல் அவசியம். எந்த நாட்டிற்கு செல்கிறார்களோ அந்த நாடும் வெளிநாட்டினீர்கள் விபரங்களை பெறவேண்டும். இதுபோல் சுற்றுலா வருபவர்கள் விபரங்களும் பெறுதல் அவசியம்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை