உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / மாலியில் தங்கச் சுரங்க விபத்தில் சிக்கி பெண்கள் 48 பேர் பரிதாப பலி

மாலியில் தங்கச் சுரங்க விபத்தில் சிக்கி பெண்கள் 48 பேர் பரிதாப பலி

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

கங்காபா: மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் தங்கச் சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில், பெண்கள் 48 பேர் பரிதாபமாக உயிரிழந்தனர்.மேற்கு ஆப்ரிக்க நாடான மாலியில் கெனீயா மாவட்டத்தில் சட்டவிரோதமாக தங்க சுரங்கம் ஒன்று இயங்கி வந்துள்ளது. இந்த சுரங்கம் திடீரென இடிந்து விழுந்தது. நூற்றுக்கணக்கானோர் மண்ணில் புதைந்துள்ளனர். உடனடியாக மீட்பு படையினர் வரவழைக்கப்பட்டு மீட்பு பணிகளில் ஈடுபடுத்தப்பட்டனர். https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=3kln4331&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இந்த விபத்தில் சிக்கி, பெண்கள் 48 பேர் உயிரிழந்தனர். மேலும் 10 பேர் படுகாயம் அடைந்தனர்.இவர்கள் சிகிச்சைக்காக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர். இதில் சிலரது நிலைமை கவலைக்கிடமாக உள்ளது. இதனால் பலி எண்ணிக்கை அதிகரிக்க வாய்ப்புள்ளது. மீட்பு பணிகள் இன்னும் தொடர்ந்து நடைபெற்று வருகின்றன.கடந்த ஜனவரி 29ம் தேதி, கங்காபா மாவட்டம் கூலிகோரோ பகுதியில் உள்ள ஒரு சுரங்கத்தில் ஏற்பட்ட விபத்தில் 10 பேர் உயிரிழந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 4 )

Shankar
பிப் 16, 2025 19:53

செய்தியை முழுமையாக படியுங்கள் shan எந்த சுரங்கத்தில் வேலைக்கு பெண்களை ஈடுபடுத்தி இருக்கிறார்கள்? இவர்கள் சட்டவிரோதமாக தங்கத்தை எடுக்க சென்றவர்கள்.


kulandai kannan
பிப் 16, 2025 17:59

ஆப்பிரிக்காவின் பல நாடுகளில் தங்க, வைர சுரங்களைச் சுரண்டி, அதற்கு ஈடாக பல குழுக்களுக்கும் ஆயுத சப்ளை செய்து நாசகாரம் விளைவிப்பது, மேல் நாடுகளின் விளையாட்டு.


Shankar
பிப் 16, 2025 13:24

நம்ம நாட்டு பெண்கள்தான் தங்கத்தின் மீது மோகம் கொண்டுள்ளார்கள் என்றால். அங்கேயுமா?


shan
பிப் 16, 2025 15:47

அவர்கள் சுரங்கத்தில் வேலை செய்பவர்கள்.


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை