உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்: 5 பேர் பலி

பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல்: 5 பேர் பலி

பெய்ரூட்: பெய்ரூட்டில் ஹிஸ்புல்லா அமைப்பினரை குறி வைத்து இஸ்ரேல் தாக்குதல் நடத்தியதில் 5 பேர் கொல்லப்பட்டனர்.ஹிஸ்புல்லா அமைப்பினர் ஆயுதங்களை கீழே போட வேண்டும் என்று இஸ்ரேலும், அமெரிக்காவும் அழுத்தம் கொடுத்து வருகிறது. ஆனால் ராணுவ வலிமையை மேலும் கட்டமைக்க ஹிஸ்புல்லா தொடர்ந்து முயற்சி மேற்கொண்டு வருகிறது.இந் நிலையில், பெய்ரூட் தெற்கே ஹரத் ஹரேக் என்ற பகுதியில் உள்ள அடுக்குமாடி குடியிருப்பு மீது கடும் வான்வழி தாக்குதலை இஸ்ரேல் நிகழ்த்தி உள்ளது. இந்த கடுமையான தாக்குதலில் 5 பேர் கொல்லப்பட்டனர், 30க்கும் மேற்பட்டோர் படுகாயம் அடைந்தனர். பலரை காணவில்லை. தாக்குதலையும், பலியான எண்ணிக்கையையும் லெபனான் சுகாதார அமைச்சகம் உறுதிப்படுத்தி இருக்கிறது.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

சமீபத்திய செய்தி