உள்ளூர் செய்திகள்

/ செய்திகள் / உலகம் / அமெரிக்கா பார்லிமென்டில் இந்திய வம்சாவளியினர் 6 பேர் எம்.பி.,க்களாக பதவியேற்பு; குவிகிறது வாழ்த்து மழை!

அமெரிக்கா பார்லிமென்டில் இந்திய வம்சாவளியினர் 6 பேர் எம்.பி.,க்களாக பதவியேற்பு; குவிகிறது வாழ்த்து மழை!

வாசிக்க நேரம் இல்லையா? செய்தியைக் கேளுங்கள்

Your browser doesn’t support HTML5 audio

வாஷிங்டன்: அமெரிக்க பார்லிமென்டின் பிரதிநிதிகள் சபையில் இந்திய வம்சாவளியை சேர்ந்த, 6 பேர் எம்.பி.,க்களாக பதவியேற்றுக் கொண்டனர். இவர்களுக்கு பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.அமெரிக்க அதிபர் பதவிக்கான தேர்தலுடன், பார்லிமென்ட் பிரதிநிதிகள் சபைக்கும் தேர்தல் நடந்தது. இந்த தேர்தலில் இந்திய வம்சாவளியினர் ஆறு பேர் வெற்றி பெற்றனர். அதில், ஜனநாயக கட்சியைச் சேர்ந்த சுஹாஸ் சுப்ரமணியம், விர்ஜினியா மாகாணத்தில் இருந்து தேர்ந்தெடுக்கப்படும் முதல் இந்திய வம்சாவளி என்ற சாதனையை படைத்தார். இவர் முன்னாள் அதிபர் ஒபாமாவின் ஆலோசகராக பணியாற்றியவர்.https://static.vidgyor.com/player/vod/html/indexv2.html?videoId=dp4478ax&cmsAccountId=6253e2117f4d5c0009c78ed4&masterProfileId=64f573f4fbdd700008119b10&pip=1&autoplay=0இவருடன், ஜனநாயக கட்சியைச் சேர்ந்தவர்களான ஸ்ரீ தனேதர் - மிச்சிகனிலும், ராஜா கிருஷ்ணமூர்த்தி - இலினாய்ஸ், ரோ கன்னா - கலிபோர்னியா; அமி பெரா, கலிபோர்னியா; பிரமிளா ஜெயபால் - வாஷிங்டனிலும் பிரதிநிதிகள் சபைக்கு தேர்வாகியுள்ளனர்.அரிசோனா மாகாணத்தில் ஜனநாயகக் கட்சியைச் சேர்ந்த அமிஷ் ஷா வெற்றி பெற்றார். இந்நிலையில், அமெரிக்கா பார்லிமன்ட் முறைப்படி செயல்பட துவங்கிய நிலையில், இவர்கள் 6 பேரும் எம்.பி.,க்களாக பதவியேற்று கொண்டனர். எம்,பி.,க்களாக பதவியேற்ற இந்திய வம்சாவளியை சேர்ந்த, 6 பேருக்கும் பல்வேறு தரப்பினர் வாழ்த்து தெரிவித்து உள்ளனர்.


தினமலர் சேனல்களுக்கு SUBSCRIBE செய்யுங்கள் !

வாசகர்கள் கருத்துகள் ( 17 )

Laddoo
ஜன 05, 2025 18:09

உலகமனைத்திலும் கோலோச்சுவது ப்ராஹ்மணர்களும் மற்றும் யூதர்களும் தான். இங்கு கோட்டா/சமூக நீதி என்று பிதற்ருகிறார்கள் அவர்கள் தன் மூளைய வைத்து முன்னேறுகிறார்கள். வாழ்க வளர்க.


Laddoo
ஜன 05, 2025 18:01

உலகமனைத்திலும் கோலோச்சுவது ப்ராஹ்மணர்களும் மற்றும் யூதர்களும் தான். இங்கு கோட்டா/சமூக நீதி என்று பிதற்றி அவனவன் சுருட்டி கொள்ளையடிக்கிறான். அவர்கள் தன் மூளைய வைத்து முன்னேறுகிறார்கள். வாழ்க வளர்க.


பாலா
ஜன 05, 2025 17:57

உபியில் என்ன நடக்கின்றது? சங்கிகள்=முஸ்லிம்கள்?


Gopalakrishnan Thiagarajan
ஜன 05, 2025 16:43

அவர்கள் இந்திய வம்சாவளியினர் மட்டுமே. நம் நாட்டில் இத்தாலிய வம்சாவளியினர் இருப்பதை போல. அவர்களால் நம் நாட்டுக்கு இன்றும் பெரிய அளவில் நன்மை கிடைக்காது ஏனெனில் அவர்கள் அமெரிக்கர் தான்.


nisar ahmad
ஜன 05, 2025 15:25

அது சரி இங்கு ஒரு வெளிநாட்டு காரன் எம் பி அல்லது எம் எல் ஏ ஆக முடியுமா? அப்படியே அவன் தேர்தலில் நின்று விட்டால் சங்கிககளின் முதல் தேர்தல் அறிக்கையில் அவனுக்கு ஓட்டு போடுபவர்கள் தேச துரோகிகள் என்றிருக்கும்.பிரச்சாரம் செய்ய விடுவார்களா அப்படியே ஜெயித்தால் பதவியேர்கத்தான் விடுவார்களா? நீதிபதியை வைத்து தடை போட்டுவிட்டுதான் மறு வேலை.


kulandai kannan
ஜன 05, 2025 13:55

இதுபோல் இந்திய அடையாளத்தின் அடிப்படையில் ஃபோட்டோ வெளியிட்டதற்கு, அமெரிக்கர்கள் கழுவி ஊற்றுகிறார்கள். இவர்களுக்கு வாக்களித்தது அமெரிக்க மக்கள் என்ற அடிப்படையில் மட்டுமே பணியாற்ற வேண்டும்.


NRajasekar
ஜன 05, 2025 12:47

70 வருடமாக திறமையுள்ள நேர்மையானவர்களை ஒதுக்கி வெட்டிபேச்சு உழைக்காமல் எல்லாவற்றையும் அனுபவிக்கும் கும்பலை வளர்தது மட்டுமே தமிழன் சாதனையாக இருக்கிறது இங்கே அறிவு திறமை உழைப்பை மதிக்கும் இடத்தில் உயர்ந்த பதவிகிடைப்பது பெருமையே சாதனையே.


nagendhiran
ஜன 05, 2025 11:29

சைமன் குஞ்சுகள்"காதில் விழுமா?


RAMAKRISHNAN NATESAN
ஜன 05, 2025 10:12

பெருமை ..... பெருமை .... ஆனா இந்தியாவின் வெளிநாட்டு கடனை தள்ளுபடி செய்ய உதவுவாங்களா ன்னு கேளுங்க ........


தமிழன்
ஜன 05, 2025 09:43

இதில் நம் சாதாரண இந்திய மக்களுக்கு என்ன லாபம் ???


nagendhiran
ஜன 05, 2025 11:29

உன்னால் இந்த நாட்டுக்கு என்ன லாபம்?


அதிகம் விமர்ச்சிக்கப்பட்டவை